இலவச செல்போன் பழுது நீக்குதல் பயிற்சி பெற ஆண்,பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.
கிருஷ்ணகிரி மாவட்டம் – இந்தியன் வங்கி நடத்தும் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவன அலுவலகத்தில்(RSETI), 30 நாட்கள் கொண்ட ஆண் பெண் இருபாலருக்குமான இலவச செல்போன் பழுது நீக்குதல் பயிற்சி (Cellphone Repairs & Service Course)*
கிருஷ்ணகிரி மாவட்டம், கே.ஆர்.பி அணையில் அமைந்துள்ள இந்தியன் வங்கிநடத்தும்ஊரகசுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவன அலுவலகத்தின் இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணையின் வளாகப் பகுதியில் அமைந்துள்ள இந்தியன் வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில், கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த
வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் கிராமப்புற மகளிர், இளைஞர்களுக்கு தொழில் துவங்குவதற்கு, பல்வேறு இலவச பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது 30 நாட்கள் கொண்ட ஆண் பெண் இருபாலருக்குமான இலவச செல்போன் பழுதுநீக்குதல் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதற்கு குறைந்தபட்சம் 5 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். மேலும் 18 வயது நிரம்பியவர்கள் முதல் 45 வயதுக்குட்பட்டோர் வரை உள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் வருகிற 06 ஆம் தேதி வியாழக்கிழமைக்குள் அலுவலகத்திற்கு நேரில் வந்து இப்பயிற்சிக்கு விண்ணப்பித்து சேர்ந்து கொள்ளலாம்.
மேலும்இப்பயிற்சியின் போது சீருடை,மதிய உணவு, காலை மற்றும் மாலை தேநீர் பிஸ்கட் ஆகியவை இலவசமாக வழங்கப்படும். பயிற்சியானது காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை நடைபெறும்.மேலும்இப்பயிற்சியின் போது பயிற்சிக்கான உபகரணங்கள் செய்முறைக்காக இலவசமாக வழங்கப்படும். பயிற்சியின் நிறைவுக்கு பின்னர், பயிற்சிக்கான தேர்ச்சி சான்றிதழ் கட்டணமில்லாமல் வழங்கப்படும்.மேலும் விவரங்களுக்கு, இந்தியன் வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம், ட்ரைசெம் கட்டிடம், கே.ஆர்.பி. அணை, கிருஷ்ணகிரி மாவட்டம், தொடர்புக்கு
9080676557, 9442247921 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

