தருமபுரி மாவட்டத்திற்கு அன்புமணி ராமதாஸ் வருகை சிறப்பாக வரவேற்க பாமக முடிவு
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு தனியார் மண்டபத்தில் பாமக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் எம்.எல்.ஏ தலைமையில் நடைபெற்றது.
தொகுதி பொறுப்பாளர் கே.இ. கிருஷ்ணன் வரவேற்று பேசினார்.மாநில இளைஞர் அணி செயலாளர் முருகசாமி, தொகுதிப் பொறுப்பாளர்கள் சத்திரிய சேகர், மாநிலத் துணைத்லைவர் பாடி செல்வம் , மாநிலப் பொறுப்பாளர்கள் வேளவள்ளி சேகர், அன்பழகன்
மாநில மகளிரணி பொறுப்பாளர் சரவணக்குமாரி, பெரியம்மா நாகு, பானு, பாலகிருஷ்ணன், வாசு நாயுடு ஆகியோர் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் வரும் 4ம் தேதி தருமபுரியில் நடைபெற உள்ள தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் மற்றும் பொதுக்குழுவில் பங்கேற்க வருகை தரும் பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது,
அதனை தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு முன்னர் என்னேகொல்புதூர், தூள் செட்டி ஏரிகால்வாய் திட்டங்களை நிறை வேற்றுவதாக வாக்குறுதி அளித்த முதல்வர் ஸ்டாலின் இதுவரை இத்திட்டங்களை நிறைவேற்றவில்லை எனவும் அதே போன்று
தும்பல அள்ளி கால்வாய் திட்டம், புலிகரை கால்வாய் திட்டம் உள்ளிட்ட நீர் கால்வாய் திட்டங்களை நிறைவேற்ற கோரியும்,மற்றும் பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலை 15 ஆண்டுகளாக செயல்படாததால் கரும்பு விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர், எனவே சர்க்கரை ஆலையை இயங்க நடவடிக்கை எடுக்க கோரியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் துரை, சுகர்மில் துரை, சரவணன், முருகன், சிலம்பரசன், குமார், சஞ்சீவன், கண்ணன், சின்னசாமி, பழனி, ஒன்றிய தலைவர்கள் ஏழு குண்டன், மாதையன், ராமசந்திரன், மகாதேவன், கோவிந்தசாமி, நகர தலைவர் ராஜா, மாநில செயற்குழு உறுப்பினர் ராஜவேல் மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய, கிளைப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

