மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: தருமபுரி தூய்மை பணியாளர்களுக்கான கிராம சேவை செம்மல் விருது வழங்கும் விழா:மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ், வழங்கினார்.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > தமிழ்நாடு > தருமபுரி தூய்மை பணியாளர்களுக்கான கிராம சேவை செம்மல் விருது வழங்கும் விழா:மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ், வழங்கினார்.
தமிழ்நாடு

தருமபுரி தூய்மை பணியாளர்களுக்கான கிராம சேவை செம்மல் விருது வழங்கும் விழா:மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ், வழங்கினார்.

Social Vision
Last updated: 2025/10/26 at 1:26 PM
Social Vision
Share
3 Min Read
SHARE

தருமபுரி தூய்மை பணியாளர்களுக்கான கிராம சேவை செம்மல் விருது வழங்கும் விழா:மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ், வழங்கினார்.

தமிழ்நாடு கிராம ஊராட்சி குடிநீர், தூய்மை காவலர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் சங்கம் சார்பில் தூய்மை பணியாளர்களுக்கான கிராம சேவை செம்மல் விருதுகள் வழங்கும் விழா தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி இராம சூர்யா திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு சங்கத்தின் மகளிர் அணி மாநில தலைவர் கா. மகேஸ்வரி தலைமை வகித்தார். மாநில தலைவர் க. கிருஷ்ணன் வரவேற்றார்.தருமபுரி மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ் கலந்து கொண்டு, தூய்மை பணியாளர்களுக்கு விருது மற்றும் சான்றிதழ் வழங்கினார்கள்.பின்னர்அவர் தெரிவித்ததாவது

தமிழ்நாடு கிராம ஊராட்சி குடிநீர், தூய்மை காவலர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் சங்கம் சார்பில் இங்கு வந்திருக்கக்கூடியதூய்மைபணியாளர்களை கௌரவப்படுத்தும் விதமாகவும், ஊக்கப்படுத்தும் விதமாகவும் உங்களை எல்லாம் சந்தித்து கொள்வதிலும் கலந்து உரையாடுவதிலும் உங்களுக்கு எனது மனமார்ந்தபாராட்டுகளையும்மகிழ்ச்சியும்தெரிவித்துகொள்கிறோன்.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் விளிம்பு நிலை மக்கள் வாழ்வில் முன்னேற்றம் அடைவதற்கு பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் மற்றும் கல்வி கடன் உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.குறிப்பாக தமிழ்நாடு அரசு தூய்மை பணியாளர்களுக்கு நல வாரியம் அமைத்து அதற்கு நல வாரியத்தலைவர் அமைத்து நிறைய திட்டங்கள் கொண்டு செயல்படுத்தி வருகிறார்கள். இந்த நலவாரியத்தின் மூலம் தருமபுரி மாவட்டத்தில் 1722 நலவாரிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க

தருமபுரி பழைய பேருந்து நிலைய வியபாரிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வியபாரிகள் வலியுறுத்தல். 
தருமபுரி நகராட்சி புதிய பேருந்து நிலையத்தினை காணொலிக் காட்சி வாயிலாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்‌.
தருமபுரி வனக்கோட்டத்தில் இரைக்கொல்லி பறவைகள் கணக்கெடுப்பு தீவிரம்

தருமபுரி மாவட்டத்திலுள்ள தனியார் மருத்துவமனை, அரசு மருத்துவமனை, ஹோட்டல்கள் தனியார் பள்ளிகள் மற்றும் திருமண மண்டபத்தில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து அடையாள அட்டைகளையும் மற்றும் விபத்துக்காப்பீட்டு திட்டம், இயற்கை மரண உதவித்தொகை, ஈமச்சடங்கு உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, தொழில்நுட்பப் பட்ட மேற்படிப்பு உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மகப்பேறு உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளையும் பெற்று பயன்பெறுமாறுகேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும், தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக அதியன் கூட்டரங்கில், ஒவ்வொரு மாதம் முதல் திங்கட்கிழமையன்று நடைபெறவுள்ள மக்கள் குறைதீர்க்கும் மனு நாள் நிகழ்வின் இறுதியில் உள்ளாட்சி அமைப்புகளின்தூய்மைப்பணியாளர்களுக்கான கோரிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களை நேரில் சந்தித்து தீர்வு காணும் வாய்ப்பினை மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்தியுள்ளது. இப்பொருள் குறித்து தூய்மைப்பணியாளர்கள் கலந்துகொண்டு பயன்பெறுமாறு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இந்த உன்னதமான பணியினை செய்ய கூடிய உங்களுக்கு அனைத்து விதமான அரசு திட்டங்களும் இது மட்டும் இல்லாமல் உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு கலைஞர் கைவினைத் திட்டத்தின் மூலம், தாட்கோ மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம் தமிழ் நாடு அரசு வங்கி கடன் உதவிகள் வழங்கி வருகிறது அதனை அனைவரும் சிறந்த முறையில் பயன்படுத்தி உங்களை மேம்படுத்தி வாழ்வில்உயரவேண்டும்எனகேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ், தெரிவித்துள்ளார்கள்.

இந்நிகழ்ச்சியில் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ரூபன் சங்கர் ராஜ், தருமபுரி உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) விமல் ரவிக்குமார்,சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ஆர். விஜியபாலன், மாநில பொருளாளர் எம். சங்கர் மாநில தலைமை நிலையை செயலாளர் எம். பொண்ணையன் மாநில அமைப்பு செயலாளர் எல். சரவணன், மாநில துணைத்தலைவர்கள் வி. சங்கர் , எம். சக்கரவர்த்தி, மகளிர் அணி மாநில துணத்தலைவர் எஸ். கீதா, மாநில இணை செயலாளர்கள்ஏ.அய்யனார்,பி.கோவிந்தசாமி, பி. சபாநாயகம்,பி.வெங்கட்டேசன், ஆகியோர் பங்கேற்று பேசினர்.இந்நாள், முன்னாள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், தமிழ்நாடு கிராம ஊராட்சி குடிநீர், தூய்மை காவலர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் கலந்துகொண்டனர்.நடிகவேல் எம்.ஆர்.ராதா நாட்டுபுற கிராமிய கலைக்குழு நடிகர் ஆர்.சிங்காரவேலன் ஏற்பாட்டில் ,  ஹரிணியின் நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

 

TAGGED: தருமபுரி தூய்மை பணியாளர்களுக்கான கிராம சேவை செம்மல் விருது வழங்கும் விழா:மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ், வழங்கினார்.
Social Vision October 26, 2025 October 26, 2025
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
அகில இந்திய வேலைநிறுத்த ஆயித்தமாநாடு #socialvisiontv
#shorts #shortvideo #shortfeed #socialvisiontv
#shortvideo #shortfeed #shorts #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #breakingnews #socialvisiontv
Social Vision TV
#shortvideo #shortfeed #shorts #socialvisiontv #dmk
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க கோரி கவன ஈர்ப்பு தர்ணா போராட்டம்.
மாவட்டங்கள்

சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க கோரி கவன ஈர்ப்பு தர்ணா போராட்டம்.

June 21, 2024
தமிழ்நாடு

கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் பி .சி .ஜோஷி 45 – வது நினைவு தினம் அனுசரிப்பு 

November 9, 2025
கல்வி & வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகைபெற விண்ணப்பிக்கலாம்.

July 6, 2024
சினிமா

September 4, 2024

September 4, 2024
தமிழ்நாடுவிளையாட்டு

அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப் பந்தய போட்டியினை மாவட்டஆட்சியர்  கி.சாந்தி, கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

January 5, 2025
தமிழ்நாடு

பதக்கம் வழங்கும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு காவல்துறை அணி வகுப்பு மரியாதை  

August 23, 2024

மேலும் படிங்க

தமிழ்நாடு

தருமபுரி பழைய பேருந்து நிலைய வியபாரிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வியபாரிகள் வலியுறுத்தல். 

February 7, 2026
தமிழ்நாடு

தருமபுரி நகராட்சி புதிய பேருந்து நிலையத்தினை காணொலிக் காட்சி வாயிலாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்‌.

February 5, 2026
தமிழ்நாடு

தருமபுரி வனக்கோட்டத்தில் இரைக்கொல்லி பறவைகள் கணக்கெடுப்பு தீவிரம்

February 5, 2026
தமிழ்நாடு

முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைக்க உள்ள தருமபுரி பேருந்து நிலையத்தை   மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஷ் நேரில் ஆய்வு 

February 3, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?