பாலக்கோடு அருகே காட்டு முயல்களை வேட்டையாடிய 3 பேர் கைது 10 முயல்கள் பறிமுதல்
தருமபுரிமாவட்டம், பாலக்கோடு அருகே புலிகரை பகுதியில் வன விலங்குகளின் மாமிசம் விற்பனை செய்வதாக பாலக்கோடு வனசரக அலுவலர் கார்த்திகேயன் அவர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது,இதையடுத்து வனக்காவலர்களுடன் விரைந்த சென்று சோதனை மேற்கொண்ட போது,புலிகரை அடுத்த கல்லாங்காட்டனூர் கிராமத்தில் 3 பேர் கம்பி வலை கூண்டில் காட்டு முயல்களை வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது,வன காவலர்களை கண்டதும் தப்பி ஓட முயன்றனர், அவர் கன சுற்றி வளைத்து பிடித்துவிசாரித்ததில்கல்லாங்காட்டனூரை சேர்ந்த வளன் (39) அரூரை சேர்ந்த மைதீன் (33) கானாப்பட்டியை சேர்ந்த சக்திவேல் (33) என்பதும் இவர்கள் அரூர் காப்புக் காட்டில் இருந்து அரசால் தடை செய்யப்பட்டவனவிலங்குகளை வேட்டையாடி விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது,இதனையடுத்து அவர்களை கைது செய்த வனத்துறையினர் இரும்பு கூண்டுடன் உயிருள்ள 9 முயல்களையும், இறந்து போன ஒரு முயலையும் கைப்பற்றினர்.
மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து மூவரையும் பாலக்கோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தருமபுரி சிறையில் அடைத்தனர்.

