அங்கன்வாடி ,சத்துணவு ஓய்வூதியர்களுக்கும் மாதம் ரூ. 7850/- ஓய்வூதியம் வழங்க கோரி தமிழ்நாடு ஓய்வூதியர் சங்கம் ஆர்ப்பாட்டம்
9- அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் ஆர்.என்.வரதன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் கே. கோவிந்தசாமி வரவேற்றார். மாவட்ட முதன்மைக் கல்விஅலுவலர் ஓய்வு எஸ்.ஆறுமுகம் மாவட்ட முதன்மைக கல்விஅலுவலர் ஓய்வு கே. பழனிச்சாமி,மாவட்ட கல்வி அலுவலர் ஓய்வு ஆர்.நடராஜன்,மாவட்ட கல்வி அலுவலர் ஓய்வு சி. ராஜசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட கல்வி அலுவலர் ஓய்வு எம். பொன்முடி,இனை இயக்குநர் , ஊரக வளர்ச்சி ஓய்வு கே. ஆர். அப்பாவு ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். தமிழ்நாடு ஓய்வுபெற்ற காவலர் நலச்சங்கம், தருமபுரி மாவட்ட தலைவர் கே. இராதாகிருஷ்ணன், மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் ஓய்வு ஜி. செல்வ மூர்த்தி,மாவட்ட துணை கண்காணிப்பாளர் ஓய்வு டி. மயில்சாமி,உதவி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் ஓய்வு யூ. எம். சுப்பிரமணி, தலைமை ஆசிரியர்கள் ஓய்வு எஸ். சீனிவாசன் ,எம்.கோபாலகிருஷணன்,மாவட்ட மகளிரணி செயலாளர் ஆர். சாந்தா, அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் எம். பெருமாள், ஆகியோர் வாழத்தி பேசினர். மாவட்ட பிரச்சார செயலாளர் டி. வி. பாலாஜிநிகழ்சசியைஒருங்கிணைத்தார். மாவட்ட பொருளாளர் வி. கிருஷணன் நன்றிகூறினார்.
70 வயது முடித்திட்ட ஓய்வூதியர் , குடும்ப ஓய்வூதியர்களுக்கு கூடுதலாக 10 சதவிகித ஓய்வூதியம் ,குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும். (தேர்தல் வாக்குறுதி எண் 308)ன்படிஅங்கன்வாடி ,சத்துணவுப் பணியாளர்களுக்கு நியாயமான ஓய்வூதியமாக மாதந்தோறும் ரூ. 7850/- தாமதமின்றி வழங்கி வேண்டும்.(தேர்தல் வாக்குறுதி எண்.313) ன்படி மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்த வேண்டும்.
மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் உள்ள குறைபாடுகள் அறவே நீக்கப்பட்டு “காசில்லா மருத்துவக் காப்பீடு” என்பதைஉறுதியாகநடைமுறைப்படுத்த வேண்டும் – மருத்துவ காப்பீட்டு திட்டத்தினை ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்களுக்கு கட்டாயப்படுத்திடக் கூடாது.ஒன்றிய அரசு ஓய்வூதியம் ,குடும்ப ஓய்வூதியர்களுக்கு வழங்கப்படும் மாதந்தோறும் மருத்துவப்படியானரூ.1000 ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்களுக்கும் நடைமுறைப்படுத்த வேண்டும்.
ஓய்வூதியத்தினைத் தொகுத்துப் பெறும் தொகையினை மாத ஓய்வூதியத்தில் இருந்து பிடித்தம்செய்யப்படும் காலத்தினை 12 ஆண்டுகள் என்ற நடைமுறையினை, கேரளா, மத்தியபிரதேசம், குஜராத் உள்ளிட்ட பல்வேறுமாநிலங்களில்நிர்ணயிக்கப்பட்டு நடைமுறைப்படுத்துவதை போல், தமிழக அரசும் தற்போதுள்ள 15 ஆண்டுகள் என்பதை 12 ஆண்டுகள்
வழங்கப்படவேண்டும்.இத்திட்டத்தினை குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும்.குடும்ப் பாதுகாப்பு நிதியாக தற்போது வழங்கப்பட்டுவரும் ரூ 50,000/- இருந்து ரூ 2,00,000/- வழங்க ஆணை பிறபிக்கவேண்டும். ஓய்வூதியர்கள் மாதத்தில் எந்த தேதியில் இயற்கை எய்தினாலும் சம்பந்தப்பட்ட மாதத்திற்குரிய ஓய்வூதியம் முழுமையாக வழங்கப்படும். என்ற நடைமுறை தற்போது கேரளா அரசில் உள்ளதைப்போல், அதே நடைமுறையினை பின்பற்றித் தமிழக அரசும் உரிய ஆணைகளை
விரைவில் வழங்கிட வேண்டும். தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் வசித்துவரும் மூத்த உறுப்பினர்கள் அனைவருக்கும் நகரப் பேருந்துகளில் இலவச பயணம் செய்யும் வகையில் ஆணைகளை பிறக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர்.

