மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: தருமபுரி டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு, பேரணியினை மாவட்ட ஆட்சியர்  ரெ.சதீஸ் துவக்கிவைத்தார்.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > ஆரோக்கியம் > தருமபுரி டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு, பேரணியினை மாவட்ட ஆட்சியர்  ரெ.சதீஸ் துவக்கிவைத்தார்.
ஆரோக்கியம்

தருமபுரி டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு, பேரணியினை மாவட்ட ஆட்சியர்  ரெ.சதீஸ் துவக்கிவைத்தார்.

Social Vision
Last updated: 2025/10/23 at 5:57 PM
Social Vision
Share
3 Min Read
SHARE
தருமபுரி டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு, பேரணியினை மாவட்ட ஆட்சியர்  ரெ.சதீஸ் துவக்கிவைத்தார்.
தருமபுரி மாவட்ட நிர்வாகம் மற்றும் சமூக சேவை அமைப்புகள் சார்பாக, தருமபுரி நகர பேருந்து நிலையத்தில் நடைபெற்ற  டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ் கொடியசைத்து துவக்கி வைத்தார்.பின்னர் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார்கள்.
பொதுமக்கள் தங்கள் வீட்டில் உடைந்த பொருள்களை பயன்படுத்துவதை முற்றிலும்தவிர்க்குமாறுகேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். உடைந்த பிளாஸ்டிக் பொருள்களில் மழைநீர் தேங்கி அதன் மூலம் கொசு உற்பத்தியாகும். இதனால் டெங்கு போன்ற நோய்கள் பரவகூடும். எனவே பொதுமக்கள் தங்களது வீட்டில் பிளாஸ்டிக் பொருள்களை முற்றிலும் ஒழித்து சுற்றுபுறத்தை துாய்மையாக வைத்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் தங்கள் வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டிகளை பிளீச்சிங் பவுடரை கொண்டு சுத்தமாக கழுவி உலர்த்திய பிறகு தண்ணீர் பிடிக்க வேண்டும் எனவும், பிடித்த தண்ணீரை காற்று புகாவண்ணம் துணிகளைக்கொண்டு கட்டி மூடி வைக்க வேண்டும் எனவும், டயர்கள், பிளாஸ்டிக் பொருட்கள், தேங்காய் சிரட்டை, உரல், ஆட்டுக்கல் போன்ற வீட்டில் உபயோகப்படாத பொருட்களில் மழைநீர் தேங்காமல் அகற்றிட வேண்டும் மேலும் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக, தருமபுரி நகர பேருந்து நிலையத்தில் டெங்கு ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் இன்று 500-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவியர்கள், தன்னார்வலர்கள்,   மகளிர் சுய உதவிக்குழுக்களை கொண்ட பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் துவக்கி வைத்து பங்கேற்றார். மேலும், இப்பேரணியானது தருமபுரி நகர பேருந்து நிலையத்திலிருந்து நான்கு ரோடு வழியாக அரசு மருத்துவமனை  சென்று நிறைவடைந்தது.
இதனைத் தொடர்ந்து டெங்கு ஒழிப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கலைக்குழு மூலம் நடத்தப்பட்ட கலைநிகழ்ச்சியினை மாவட்டஆட்சியர்ரெ.சதீஸ் பார்வையிட்டார்கள்.
மேலும், தன்னார்வலர்கள் நிறுவனம் சார்பாக தூய்மை பணியாளர்களுக்கு டார்ச் லைட்களை மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ் மற்றும் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.மணி ஆகியோர் வழங்கினார்கள்.
இந்த விழிப்புணர்வு பேரணி மற்றும் நிகழ்ச்சியில் தன்வந்திரி ஹெல்த் கேர், ஸ்ரீ அங்காளம்மன் பாராமெடிக்கல், அம்பிகா பாராமெடிக்கல், ஹோலி கிராஸ் பாராமெடிக்கல், சபரி ஐயப்பா பாராமெடிக்கல், விவேகானந்தா பாராமெடிக்கல், வெங்கடேஸ்வரா பாராமெடிக்கல், சாய் பாராமெடிக்கல் ஆகிய கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில்  தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன், தருமபுரி  நகராட்சி தலைவர் லட்சுமி நாட்டான் மாது,அரசு தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.மனோகர், துணை இயக்குநர் சுகாதாரம் மரு.இராஜேந்திரன், நகர் நல அலுவலர் இலட்ஷியவர்ணா, ஆதி பவுண்டேஷன் நிறுவனதலைவர்,ஆதிமூலம்,எண்ணங்களின் சங்கமம் கொங்கு மண்டலஒருங்கிணைப்பாளர் குளோபல் பூபதி,பி ஜி ஆர் ,மருத்துவமனை, மருத்துவர் ராஜேஷ்,  நித்யா மருத்துவமனை, மருத்துவர் செந்தில் குமார், ஆகியோர் கலந்து கொண்டனர்.
காமதேனு சாரிட்டிஸ் சங்கர், கயல் குழுமம் அறிவழகன், பசுமை ஆசிரியர் சங்கர்,  மை தருமபுரி செயலாளர் முனைவர் தமிழ்செல்வன், அமைப்பாளர் செந்தில்குமார், கக்கன் இளைஞர் மன்றம் கபில் தேவ், கிராம விழிகள் அறக்கட்டளை வெங்கடேஷ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். பொதுமக்களுக்கு டெங்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பாரதி கிராமிய நாட்டுப்புறக் கலைக்குழு மற்றும் தெருக்கூத்து கலை குழுவினர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினார்கள். தருமபுரி டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சியை மை தருமபுரி நிறுவனத் தலைவர் சதீஸ் குமார் ராஜா, எண்ணங்களின் சங்கமம் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் பிரகாஷ் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.
TAGGED: தருமபுரி டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு, பேரணியினை மாவட்ட ஆட்சியர்  ரெ.சதீஸ் துவக்கிவைத்தார்.
Social Vision October 23, 2025 October 23, 2025
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortsfeed #shortsviral #shortsindia #viral #viralreels #annanmallai
#shorts #shortsfeed #shortsviral #shortsvideo #viral #viralvideo #socialvisiontv
#shorts #shortvideo #shortsviral #viralreels #viralvideos #socialbisiontv #congress
#shorts #shortvideo #shortsfeed #viral #viralreels #tvk #tvkvijay #cmotamilnadu
#shorts #shortvideo #shortsviral #shortsfeed #viral #viralreels #tvk #tvkvijay #cmotamilnadu
#shorts #shortvideo #shortsvideo #shortsviral #viral #viralreels #viralnews
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

மாவட்டங்கள்

சுதந்திர போராட்ட வீரர் தியாகி சுப்பிரமணிய சிவா நினைவுதினம் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி அனுசரிப்பு 

July 23, 2026
தமிழ்நாடு

தருமபுரி கிழக்கு மாவட்ட இளைஞர் அணியின், பணியை பாராட்டி வாழ்த்து தெரிவித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 

May 23, 2024
தமிழ்நாடு

கோழியை கவ்விக் கொண்டு சென்ற சிறுத்தை – சி.சி.டி.வி.காட்சி வைரல் 

May 30, 2024
மாவட்டங்கள்

தருமபுரி பொறியியல் கல்லூரி பேருந்து நிறுத்தத்தில், பொதுகழிப்பறை குடிநீர் வசதி ஏற்படுத்த வலியுறுத்தல்.

June 23, 2025
மாவட்டங்கள்

காவல்துறையில் ஓய்வு பெற்றவர்களுக்கு தருமபுரி எஸ்பி பாராட்டு 

May 31, 2024
மாவட்டங்கள்

ஊராட்சி செயலாளர்களுக்கு உறுதியளிப்பு ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க கோரி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம்

February 11, 2026

மேலும் படிங்க

ஆரோக்கியம்

தருமபுரி புதிய பேருந்து நிலையத்தில் உணவு பாதுகாப்புத் துறையினர் விழிப்புணர்வு மற்றும் திடீர் ஆய்வு

August 11, 2026
ஆரோக்கியம்

12-வது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு ஆக 7 அன்று இளிகத்தில்  நெசவாளர்களுக்கு இலவச சிறப்பு மருத்துவ முகாம்

August 4, 2026
ஆரோக்கியம்

ஒகேனக்கல் ஆடிப்பெருக்கு விழாவில் உணவு பாதுகாப்புத் துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

August 3, 2026
ஆரோக்கியம்

போலி கால்நடை மருத்துவர்கள் மற்றும் பாரம்பரிய கால்நடை வைத்தியர்கள்  கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பது அரசு விதிகளின்படி குற்றச்செயலாகும். ஆட்சியர் ரெ.சதீஸ் எச்சரிக்கை 

February 11, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?