கடலூரில் மின்னதாக்கி இறந்தவர்களுக்கு தலா ரூ 25 இலட்சம் வழங்க இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்.
கடலூரில் மின்னல் தாக்கி இறந்த விவசாய தொழிலாளர்களுக்கு தலா ரூபாய் 25 லட்சம் முதல்வர் நிவாரண நிதியிலிருந்து உடனே வழங்க வேண்டுமென இந்திய ஐக்கிய கம்னியூஸ்ட் கட்சி கோரிக்கைவிடுத்துள்ளது,
இதுகுறித்து அக்கட்சியின் மாவட்ட செயலாளர் ஜே. பிரதாபன் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது :
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகில் இருக்கும் அரியநாச்சி கிராமம் சிவக்குமார் நிலத்தில் மக்கா சோளகதிர் சாகுபடியில் கலை எடுத்த கழுதூர் கிராமத்தினை சேர்ந்த கனிகா,பாரிஜாதம்,சின்ன பொண்ணு என்கிற ராஜேஸ்வரி மற்றும் சிவக்குமார் மனைவி ராஜேஸ்வரி ஆகியவர்கள் இடிதாக்கி சம்பவ இடத்திலேயே இறந்துள்ளனர். இவர்களுடன் பணி செய்த தவமணி என்பவர் இரண்டு கண்களும் பாதிக்கப்பட்டு மருத்துவ மனையில் சிக்கிச்சை பெற்று வருகின்றனர். இடிதாக்கி உயிர்யிழந்த விவசாய தொழிலாளர் குடும்பங்களுக்கு முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து 25 லட்சம் ரூபாய் தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும். முதல்வர் அறிவிப்பு ரூ 5 லட்சம் என்பது பாரபட்சமானது,
விவசாய தொழிலாளியாக இருந்து மக்கா சோளகதிர் சாகுபடியில் கலை எடுத்துக் கொண்டு இருக்கும் பொழுதே இயற்கை பேரிடரால் உயிர்யிழந்த குடும்பங்களுக்கு ரூ 5 லட்சம், முதல்வர் நிவாரண நிதியில் இருந்து வழங்கபடும் என்பதனை மாற்றி ரூ 25 லட்சம் ரூபாயாக வழங்க வேண்டுமென இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் தருமபுரி மாவட்டக்குழு சார்பில் கேட்டுக் கொள்வதாக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

