தருமபுரி, தீபாவளிக்கு 500 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க மாற்றுதிறனாளிகள் முன்னேற்ற சங்கம் முடிவு
தமிழ்நாடு மாற்று திறனாளிகள் முன்னேற்ற சங்கத்தின் தருமபுரி மாவட்டம் செயற்குழு கூட்டம் தருமபுரியில் உள்ள அச்சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் கே. பச்சியப்பன் தலைமை வகித்தார்.
மாவட்ட செயலாளர் முத்துலட்சுமி சேகர், மாவட்ட பொருளாளர் கே. கிருஷ்ணன், தருமபுரி ஒன்றிய செயலாளர் டி. திருஞானம், நிர்வாகிகள் குமுதா எம். மாதம்மாள், கே. தேவன், திம்மன், மாதேஷ்,கரூரான், முனியம்மாள், துரைசாமி, பெரியண்ணன், ஆறுமுகம், மஞ்சுளா, பசுவன், அண்ணாமலை, இமான்,லட்சுமி, கணேசன், பார்வதி, சரவணன் கே. சண்முகம் எம். முரளி ஆகியோர் பங்கேற்று பேசினர்.

தமிழ்நாடு மாற்று திறனாளிகள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள 500 மாற்றுத்திறனாளிகளுக்கு தீபாவளியை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்குவது என முடிவு செய்யப்பட்டது. மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் உறுப்பினர் சேர்ப்பது, என முடிவு செய்யப்பட்டது. முன்னதாக இறந்த மாற்றுத்திறனாளிகளுக்குஅஞ்சலி செலுத்தினர்

