சமூக மாற்றம், சமூக பொருளாதார மாற்றம், அறிவார்ந்த சமூகத்தை உருவாக்குவதுபுத்தகத்திருவிழாக்ள்:
பேச்சாளர் ஸ்டாலின் குணசேகரன்
தருமபுரியில் மாவட்ட நிர்வாகம் , தகடூர் புத்தகப்பேரவை, பாரதி புத்தகாலயம் இணைந்து நடத்தும் 7 ஆம் ஆண்டு நடைபெற்றுவரும் புத்தகத்திருவிழாவில் – 7 ஆம் நாள் கருத்தரங்கம் நடைபெற்றது
தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் இரா. காயத்திரி தலைமை வகித்தார். ஆசிரியர் ப. லோகநாதன் வரவேற்றார். தருமபுரி மாவட்ட மறைமாட்ட ஆயர் முனைவர் லாரன்ஸ் பயஸ், அதியமான் அரண்மனை உரிமையாளர் கி. கோவிந்தசாமி, ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று பேசினர். அண்ணல் அம்பேத்கர் படிப்பு வட்ட தலைவர் வெ. ராஜன், ஐ. கே. முருகன், மை தருமபுரி சதீஷ், மருத்துவர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலையுரையாற்றினர். பேசும் புத்தகங்கள் என்ற தலைப்பில் மக்கள் சிந்தனை பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன் பேசினார். இலக்கிய பெருமன்ற மாவட்ட செயலாளர் கே. சின்னக்கண்ணன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். ஆசிரியர் ச. அறிவு மணி நன்றி கூறினார். முன்னதாக மகாத்மா காந்தி பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவப் படத்திற்கு மாலை வைத்து மரியாதை செலுத்தினர்.
பேசும் புத்தகங்கள் என்ற தலைப்பில்
மக்கள் சிந்தனைபேரவை தலைவர் ஸ்டாலின்குணசேகரன் பேசியதாவது:
பேசப்படும் புத்தகங்கள் எத்தனை, சில புத்தகங்கள் பேசப்படும் புத்தகங்களாக இருக்கின்றன. 25 ஆண்டுகளாக புத்தகத்திருவிழா எவ்வளவு மாற்றம் அறிவுசார்ந்த நிகழ்ச்சிநடத்திவருவதால் தமிழகத்தில் எத்தனை மாற்றம் வரும் 25 ஆண்டுகள் நடைபெற உள்ள புத்தகத்திருவிழாவில் எவ்வளவு மாற்றம் நிகழும் நினைத்து பார்க்காத அளவுக்கு மாற்றம் ஏற்படும். ஈரோட்டில் 21 ஆண்டுகளாக புத்தகத்திருவிழா நடைபெற்று வருகிறது. உலக புகழ்பெற்ற ஆங்கில புத்தக நிறுவனங்கள் எல்லாம் ஈரோடு புத்தகத்திருவிழாவிற்கு வருகின்றனர். கடந்த 15 ஆண்டுகளில் தான் போட்டி தேர்வு குறித்து விழிப்புணர்வு உள்ளது. இந்த விழிப்புணர்வு பெற்றோர் மூலமாகவோ கல்வி நிறுவனத்தின் மூலமோ தனித்த அமைப்பின் மூலமோ விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கலாம். அன்று சென்னையில் மட்டும் புத்தகத்திருவிழா நடந்தது. அதன் பிறகு நெய்வேலி லிக்னைட் தொழிற்சாலையில் பல ஆயிரம் வெளிமாநில பொறியாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு ஒரு பொதுவான விழா நடத்த வேண்டும், என்ற நோக்கில் எல்லோருக்கும் பொதுவாக புத்தகத்திருவிழா நடத்தினர். ஆனால் புத்தகம் வாங்க வேண்டும் என்றால் சென்னைக்கும், நெய்வேலிக்கு செல்லமுடியாது. பின்னர் சமூக அமைப்புகள் தருமபுரி உட்பட சில மாவட்டங்களில் புத்தகத்திருவிழா நடத்தினர். அதன்பின்பு அனைத்து மாவட்டங்களிலும் அரசு நிர்வாகமே புத்தகத்திருவிழா நடத்தினர். இன்று போட்டித் தேர்வுகளின் மூலம்தான் வேலைவாய்ப்புக்கு செல்ல முடியும் என்ற நிலை உருவானது. இன்று ஐஏஎஸ் ஐபிஎஸ், போன்ற தேர்வுகளுக்கு சிறந்த பயிற்சி மையம் இலவச பயிற்சி மையங்கள் வந்துவிட்டன. இது புத்தகத்திருவிழாவின் புரட்சிகரமான நடவடிக்கை என்று சொல்லலாம். சமூக மாற்றம் சமூக பொருளாதார மாற்றம் அறிவார்ந்த சமூகத்தை உருவாக்குவது புத்தகத்திருவிழாக்கள். இன்று புத்தகத்திருவிழாக்கள் குறித்து நல்ல எழுச்சி ஏற்பட்டுள்ளது.
திருவள்ளூவர் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் திருக்குறளை எழுதினார். இதனை ஆய்வாளர்கள் பிரகடனப்படுத்தினர். கன்பீயூஸ் தோன்றி2500ஆண்டுகளாகிறது.திருக்குறள் எழுதி 2 ஆயிரம் ஆண்டுகள் ஆகிறது. கற்பனைக்கு எட்டாத தொலைவில் உள்ளது. ஓலைச்சுவடிகள் காலம் 300 ஆண்டுகள் தான் திருக்குறளில் உளவியல், அறிவு, அறிவியல், பண்பாடு, குறித்து எழுதியிருக்கிறார். திருக்குறள் இன்னும் ஈராயிரம் ஆண்டுகள் கடந்தும் பேசப்படும். திருக்குறளில் இறைநம்பிக்கை குறித்து எழுதப்பட்டது. ஒரு குறிப்பிட்ட கடவுளை எழுதவில்லை, மனிதரை பற்றியே எழுதியுள்ளார்.
காலத்தை கடந்து வென்று நிற்கிறார் அண்ணல் மகாத்மா காந்தியடிகள் காந்தியடிகளின் கடைசி 200 நாட்கள் புத்தகம் பேசும் புத்தகமாக உள்ளது. இன்று என்ன நடக்கும் என்பதை அன்றே எழுதியிருக்கிறார் காந்தி அவர்கள் ஒரு தீர்க்கதரிசி,
விடுதலை போராட்டத்தில் தமிழரின் பங்கு என்ற நூல் வெளிவந்த 25 ஆண்டுகள் ஆகிறது. தமிழ் பெண் கான்பூரில் வசித்து வந்த கேப்டன் லட்சுமி வெளியிட்டார். இவர் வாழும் நேதாஜி என பேசினார்.
. .

