சமூக நல்லிணக்கம் சார்பில் காந்தி பிறந்த நாள் விழா
சமூக நல்லிணக்க மேடை சார்பில் மகாத்மா காந்தி பிறந்த நாளை முன்னிட்டு தருமபுரியில் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தொடர்ந்து மக்கள் ஒற்றுமை மேடையின் பொறுப்பாளர் அ. குமார் தலைமையில் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மேடையின் இணை ஒருங்கிணைப்பாளர் பொ.மு.நந்தன்,
இரா. சிசுபாலன், என். சுபேதார், மின்னல் சக்தி, சிராஜுதீன், செந்தில் ராஜா, கே.என். மல்லையன், டி.எஸ். ராமச்சந்திரன், ஆர். ஜோதிபாசு, என் . கந்தசாமி, கே.கோவிந்தசாமி, கே.பூபதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
பின்னர் மதசார்பின்மை பாதுகாப்போம் தீண்டாமையை ஒழிப்போம் என உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

