மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: கதர் ஆடையாவது வாங்கி ஏழை  நெசவாளர்களின் வாழ்வில் ஒளி ஏற்றிட வேண்டும் மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஷ் வேண்டுகோள்! 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > மாவட்டங்கள் > கதர் ஆடையாவது வாங்கி ஏழை  நெசவாளர்களின் வாழ்வில் ஒளி ஏற்றிட வேண்டும் மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஷ் வேண்டுகோள்! 
மாவட்டங்கள்

கதர் ஆடையாவது வாங்கி ஏழை  நெசவாளர்களின் வாழ்வில் ஒளி ஏற்றிட வேண்டும் மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஷ் வேண்டுகோள்! 

Social Vision
Last updated: 2025/10/02 at 11:40 AM
Social Vision
Share
2 Min Read
SHARE
 கதர் ஆடையாவது வாங்கி ஏழை  நெசவாளர்களின் வாழ்வில் ஒளி ஏற்றிட வேண்டும் மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஷ் வேண்டுகோள்! 
அண்ணல் காந்தியடிகள் அவர்களின் 157-வது பிறந்தநாளை முன்னிட்டு கதர் கிராமத் தொழில்கள்-காதி கிராஃப்ட், செய்தி மக்கள் தொடர்புத் துறை ஆகிய துறைகளின் சார்பில் தருமபுரி காதி கிராஃப்ட் விற்பனை அங்காடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அண்ணல் காந்தியடிகள் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.சதீஸ், மலர்தூவி மரியாதை செலுத்தி, தீபாவளி சிறப்பு கதர் விற்பனையை  தொடங்கி வைத்தார்.
இந்தியத் திருநாட்டின் விடுதலைக்காவும், தன்னிகரற்ற முன்னேற்றத்திற்காகவும் தன் வாழ்க்கையினையே முழுமையாக அர்ப்பணித்த மகாத்மாவின் நினைவுகளை போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும்          அக்டோபர்-திங்கள் 2-ம் நாள் அண்ணல் காந்தியடிகளின் பிறந்த நாள் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
கடந்த ஆண்டுகளைப் போலவே நடப்பாண்டிற்கும் மாநில அரசு மற்றும் கதர் கிராமத் தொழில்கள் ஆணைக்குழுவினரால் கீழே குறிப்பிட்டுள்ளவாறு கதர் விற்பனைக்காக தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாண்டு காந்தி ஜெயந்தி மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு விற்பனை தள்ளுபடியாககதர் 30 சதவீதமும்,  பட்டு 30 சதவீதமும், பாலிஸ்டர் 30 சதவீதமும், விற்பனை செய்யப்படுகிறது. தருமபுரி மாவட்டத்தில்  காதி கிராப்ட் விற்பனை நிலையம் செயல்பட்டு வருகிறது.  பொது மக்கள் அனைவரும் கிராமப்புற ஏழை பெண்களின் மேம்பாட்டு நலனைக் கருதியும் சிறு தொழில் வல்லுநர்களை ஊக்குவித்து ஆதரவு தரும் வகையிலும் மாநில அரசும் கதர் கிராமத் தொழில்கள் ஆணைக்குழுவும் வழங்கியுள்ள மாபெரும் தள்ளுபடி சலுகையைப் பயன்படுத்திட கதர் இரகங்கள் அதிக அளவில் வாங்கி ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
எனவே அனைத்து அரசுத்துறை அலுவலர்களும், பணியாளர்களும், தொழிலாளர்களும் மற்றும் பொது மக்களும் கதர் துணி இரகங்களை பெருமளவில் வாங்கி இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக் கொள்வதுடன் காந்திஜியின் கனவுகளை நனவாக்கும் பொருட்டு, நாட்டின் நலன் கருதியும், நலிவடைந்த கிராமப்புற கைவினைஞர்கள் மற்றும் பெண்கள் முன்னேற்றத்திற்கு ஆதரவினை வழங்கிடவும் மேலும் வேகமாக வளர்ந்து வரும் உலகத்தில் பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிற நிலையில் கதர் துறையின் வளர்ச்சிக்கு தேசிய உணர்வுடன் மக்களாகிய நாம் ஆதரவு அளிக்க வேண்டியது என்பது மிகவும் அவசியமானதொன்றாகும்.
இந்நிகழ்ச்சியில் காதி கிராப்ட் மேலாளர் தருமபுரி செல்வம் ஆய்வாளர்  ஜெயக்குமார் முன்னாள் மேலாளர்  பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட  அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
Social Vision October 2, 2025 October 2, 2025
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
அகில இந்திய வேலைநிறுத்த ஆயித்தமாநாடு #socialvisiontv
#shorts #shortvideo #shortfeed #socialvisiontv
#shortvideo #shortfeed #shorts #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #breakingnews #socialvisiontv
Social Vision TV
#shortvideo #shortfeed #shorts #socialvisiontv #dmk
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

பெரியாம்பட்டி
மாவட்டங்கள்

பெரியாம்பட்டியில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் காலிகுடங்களுடன் மறியல்.

March 19, 2024
தமிழ்நாடு

தருமபுரி ஸ்ரீமகாலட்சுமி சில்க்ஸ்ல் வரும் 14ஆம் தேதி வெளிநாடு சுற்றுலா செல்ல குலுக்கல் வாடிக்கையாளர்கள் கலந்து கொள்ள நிறுவனர் அழைப்பு

April 1, 2025
இந்தியாசினிமா

2027 பொங்கலுக்கு ரிலீசாகும் நடிகர் ரஜினிகாந்தின் “தலைவர் 173”

November 5, 2025
அரசியல்

அதிமுக மகளிர் அணி துணைச் செயலாளராக நடிகை காயத்ரி ரகுராம் நியமனம்

March 2, 2024
விளையாட்டு

முதலமைச்சர் கோப்பை போட்டிகள் பங்கேற்க்க மாவட்ட ஆட்சியர் அழைப்பு 

September 4, 2024
சுற்றுலா

வெள்ளக்காடானது ஒகேனக்கல்.காவிரி ஆற்றில் 65000 கன அடி தண்ணீர் 

July 1, 2025

மேலும் படிங்க

மாவட்டங்கள்

பென்னாகரம் பருவதன அள்ளியில் சிட்கோ அமைக்கும் பணியை விரைந்து முடிக்க இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்.

February 7, 2026
மாவட்டங்கள்

10,517 ஏக்கர் நிலம் பாசனம் பெறும் வகையில் வாணியாறு நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறப்பு

February 6, 2026
மாவட்டங்கள்

தருமபுரி பிப்-12 அகில இந்தியவேலை நிறுத்தத்தில் போக்குவரத்து கழக ஊழியர்கள் முழுமையாக பங்கேற்க முடிவு 

February 5, 2026
மாவட்டங்கள்

தொப்பையாறு நீர்த்தேக்கத்திலிருந்து விவசாய நிலம் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

February 5, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?