தருமபுரி மாவட்டம் துவங்கி 60 ஆண்டுகள் நிறைவு: இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து
தருமபுரி மாவட்டம் துவங்கி 60 ஆண்டுகள் நிறைவடைந்ததையெட்டி இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட் செயலாளர் ஜே. பிரதாபன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
இந்தியா அன்னியர்களிடமிருந்து விடுதலை கிடைத்த பின் நிர்வாக வசதிக்காக சேலம் ஜில்லாவில், இன்றைய தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் இருந்தன. அதனால் மாவட்ட தலைநகர் செல்ல வேண்டுமானால், சேலம் செல்ல வேண்டியுள்ளது. அதனால் 1960 ஆண்டுகளிலிருந்து தருமபுரி-கிருஷ்ணகிரி-ஓசூர்-அரூர் அடங்கிய மாவட்டமாக பிரிக்க வேண்டும் என்ற குரல் எழுந்தது. இதன் தொடர்ச்சியாக தருமபுரி சட்ட மன்ற இடைத்தேர்தல் 1965 ஆம் ஆண்டு நடைபெற்ற பொழுது, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளித்தபடி காங்கிரஸ் கட்சி இடை தேர்தலில் வெற்றது.

பின்னர் தருமபுரி மாவட்டம்
அண்ணல் காந்தியடிகள் பிறந்த தினமான 1965 ஆம் ஆண்டு, அக்டோபர் -2 ஆம் ஆண்டு உதயமானது,மக்கள் பெறும் மகிழ்ச்சியடைந்தனர். தருமபுரி மாவட்ட மக்கள்,அதன் பின் புதிய ஆட்சியர் அலுவலகம்,காவல் கண்காணிப்பாளர் அலுவலகம்,மாவட்ட தலைமை மருத்துவ மனை என்று கட்டிடங்கள் கட்டப்பட்டு சிறப்பாக நிர்மானித்தனர்,
நீதி நிர்வாக தலைமையகம் கிருஷ்ணகிரியில் அமைந்தது,
மூன்று கோட்ட வருவாய் வட்டங்களான தருமபுரி,கிருஷ்ணகிரி,ஓசூர் ஆகியவைகள் உருவாகின,
இந்நிலையில் தருமபுரி மாவட்ட மக்களின் வாழ்நிலை கிராமங்களை உள்ளடக்கிய மாவட்டம்தான்நிலப்பரப்புகள் ஆதிக்கம்,கிராம கட்டுப்பாடு இதன் மையமாக சாதியை மேலாத்திக்கம் என்று கிராமப்புறங்கள் இருந்தன,

அரசு நிர்வாகம் அடிதட்டு மக்களின் வாழ்கைக்கு சில திட்டங்கள் கொண்டு வந்தாலும், அடக்கு முறையை எதிர்த்து தடைகளை மீறி நடத்திய விடுதலைப் போராட்ட வீரர்களான அன்னாஜி,
லலிதா அன்னாஜி, ஆர் பச்சாகவுண்டர்,பஞ்சாட்சரம்,ஜயம்பெருமாள்,அப்பாதுரை,கிட்டு,டி டி ராமசாமி,பி சீனிவாசன் இவர்களுடன் என்.முத்து இணைந்து,தருமபுரி மாவட்ட மக்களின் ஜனநாயக உரிக்கைக்காகவும், அரசியல் உரிமைக்காகவும்,
மாவட்ட வளர்ச்சிக்காகவும் முன்னெடுத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில், மக்கள் தலைவர் எம். கல்யாணசுந்தரம் வழிகாட்டுதலின்படி செயல்பட்டனர். என்பதனை வரலாற்றில் மறைக்க முடியாது,
அதன் பிறகு 1970 ஆம் ஆண்டு பல்வேறு அமைப்புகள், என் .ஜி.ஓ, கள்,நக்சல்பாரி இயக்கம் என்று தோன்றியது,மற்ற அரசியல் இயக்கங்கள் ஆட்சிஅதிகாரத்தில் இருந்து மாவட்ட வளர்சிக்கான முறையில் நீர்பாசன திட்டங்கள்,ஓசூர் தொழில்பேட்டை, தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய இடங்களில் சிறு தொழில்பேட்டை,தருமபுரி, கிருஷ்ணகிரியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி,ஓசூரில் ஜ டி ஜ,கிருஷ்ணகிரியில் பல்தொழிநுட்ப கல்லூரி என்று தொடங்கப்பட்டன,
கிராமப்புற மக்கள் ஆர்வத்தில் முயற்சி எடுத்த இடங்களில் தொடக்கப் பள்ளிகள்,நடு நிலைப் பள்ளிகள்,உயர் நிலைப் பள்ளிகள் சில இடங்களில் துவங்கப்பட்டன,
1977 ஆம் ஆண்டு எம் .ஜி .ஆர் .அவர்கள் முதலமைச்சர் ஆண பின் கர்ணம்,முன்சீப் பதவிகளை எடுத்து விட்ட பின் கிராம நிர்வாக அலுவலர்கள் நியமித்த பின்பு 1984 ஆம் ஆண்டு நில மேம்பாட்டு திட்டம்(UDR) வந்த பின்புதான், தருமபுரி மாவட்ட மக்களுக்கு நில உரிமை, தமிழ் நாடு அரசு மூலம் கிடைத்தது. அதன் பின்தான் சிறுகுறு,விவசாயிகள், கிணற்று பாசனம, கால்நடைகளை வைத்து நீர்பாசன விவசாயம் பெரும் பகுதி தொடங்கினார்கள். இதனுடைய முன்னேற்றம் மின் மோட்டார் மூலம் விவசாயம் செய்தனர். வார சந்தைகள் மூலம் கிராமப்புற பொருளாதாரம் வளர்ந்தன,மெதுவாக பள்ளி சென்று படிக்கும் உரிமை, ஒடுக்கப்பட்ட பட்டியல் மக்கள்,பழங்குடி மக்கள் கல்வி முதல் தலைமுறை வந்தது. இப்படி தருமபுரி மாவட்டம் வளர்சியடை தொடங்கியது இதன் பின்பு அடித்தட்டு மக்கள் வளர்ச்சி அடைந்த பொழுதுதான் சாதிய மேலாத்திக்கம் உடைபடும் பொழுது, சமூக ரீதியான பிரச்சனைகள் மேலோங்கிய பொழுது பொருளாதார வளர்ச்சியயை நோக்கி அனைத்து சமூகங்களும் முன்னேறி வருகின்றனர்,
இந்த வளர்ச்சி, கல்வி வளர்ச்சியில் உயர் கல்வியை அடைந்து, அரசு அலுவலர்களாகவும், பட்டதாரி, முது நிலை பட்டதாரிகளுக்காக, வளர்ந்து பொறியியல்,மருத்துவ படித்தனர். அத்துடன் அரசு போட்டித் தேர்வுகளில் தருமபுரி மாவட்ட இளைஞர்கள் அதிக அளவில் தேர்வாகினர்.

பின் தங்கி இருந்த பெண் கல்வி, அனைவருக்கும் கல்வி திட்டம் வந்த பின் 98 சதவீதம் பெண்கல்வியில் முன்னேற்றம் கண்டுள்ளோம்! தற்பொழு புதிய கலைக் கல்லூரிகள்,மருத்துவ கல்லூரி,சட்டக் கல்லூரி வந்துள்ளது வரவேற்க்கதக்கது. இப்படி இருந்தும் தருமபுரி மாவட்ட மக்களின் நிலமற்ற தொழிலாளர்களின் வளர்ச்சி என்பது பெரும் குடி பெயர்சியாக கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கு முன் இருந்து வந்தது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்டம் -2005 நிறைவேற்றப்பட்டு, 2009 ஆம் ஆண்டு முதல் அமுலாகி வருவதாலும், பொது வினியோக திட்டத்தின் கீழ் குறைந்தபட்ச உணவுபொருட்கள் வினியோகத்தினாலும் , நிலமற்ற பெண்களின் குடி பெயர்ச்சி பெரும் அளவில் குறைந்துள்ளது,
ஒகேனக்கல் குடிநீர் நீர் அனைத்து பகுதி மக்களுக்கும் கிடைக்க வேண்டும்.
இப்படி இருந்த பொழுதும் ஒகேனக்கல் குடிநீர் முழுமையாக அனைவருக்கும் குடிப்பதற்கு30 லிட்டர் கிடைக்கவில்லை, அனைத்து மலை கிராமங்களுக்கும் சாலை வசதி பூர்தியடையவில்லை, பழங்குடியினரின் நில உரிமை கிடைக்கவில்லை,
நீர்ப்பாசன திட்டங்களை நிறைவேற்றவேண்டும்
மாவட்ட மக்களின் முக்கிய கோரிக்கையான காவிரி உபரிநீரை ராட்சத மின் மோட்டார்கள் மூலம் அனைத்து ஏரிகளிகளுக்கும் தண்ணீர் நிரப்பும் திட்டம்,ஈச்சம்பாடி நீர்ரேற்றும் திட்டம்,தூள் செட்டி ஏரி-அள்ளியாளம் திட்டம்,மற்றும் இருக்கும் சிறு பாசன திட்டங்களை நிறைவேற்ற வேண்டும்,
ஏரிகளில் இருக்கும் சீமை கருவேல மரங்களை முற்றாக அகற்ற நீண்ட கால திட்டம் வேண்டும்,கால் நடை வளர்க்க மேய்சல் நிலங்களை பாதுகாத்து அடையாளம் காட்ட வேண்டும்,
தருமபுரி சிப்காட் டில் விவசாயம் சார்ந்த தொழிற்சாலை அமைக்கவேண்டும்.
பிளஸ்டூ, படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ற வகையில் தருமபுரி மாவட்டத்தின் ஒன்றிய தலைநகரங்களில், அரசுகலை அறிவியல் கல்லூரிகள்,பொறியியல் கல்லூரிகள் துவங்க வேண்டும்,மாவட்டத்தின் பிரதான தொழிலான வேளாண்மை வளர்ச்சிக்கு, தருமபுரி தொழில் பேட்டை வளாகத்தில் விவசாய சேர்ப்பு தொழிற்சாலைகளான,
தென்னை உபபொருட்கள் ஆலை,
பால் உபபொருட்கள் உற்பத்தி ஆலை,
சிறு தானிய மதிப்பூட்டும் ஆலை,
பட்டு நூற்பாலை,பருத்தியை கொண்ட நூற்பாலை,மரவள்ளி கிழங்காலை,
ஆகிய தொழிற்சாலைகளை கூட்டுறவு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் ஏற்படுத்த வேண்டும்,
கடந்த அறுபது ஆண்டுகளில் பல்வேறு துறைகளின் மூலம் தருமபுரி மாவட்டம் வளர்ந்து வந்திருப்பதற்கு உழைத்த அரசுதுறைஉயர்அதிகாரிகளுக்கும், அலுவலர்களுக்கும்,மக்கள் பிரதிநிகளுக்கும் அனைவருக்கும் தருமபுரி மாவட்ட அறுபது ஆண்டு வாழ்த்துக்களை இந்தி ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் தருமபுரி மாவட்டக்குழுவின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறது. மேலும் மேலும் மாவட்ட மக்களின் வளர்ச்சிக்காக ஒன்றுபட்டு போராடுவோம் என்று அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

