அரசு விடுதிகளில் சமையலர்,காவலர் , தூய்மைபணியாளர் ,பணியிடங்களை நிரப்ப விடுதி பணியாளர் சங்கம் வலியுறுத்தல்.
தருமபுரி மாவட்ட சமூகநல விடுதி பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலதுறைவிடுதி பணியாளர் சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் தருமபுரியில் நடைபெற்றது.
மாவட்ட தலைவர் பச்சியப்பன் தலைமை வகித்தார்.மாவட்டசெயலாளர் பொன்.வடிவேல் வேலை அறிக்கை வைத்து பேசினார்.சங்கத்தின் மாநில செயலாளர் டி.மணிவண்ணன்,மாநில தணிக்கையாளர் ஜே.ஜெயக்குமார்,மாநில இணை செயலாளர் மாரியப்பன்,மாவட்ட பொருளாளர் மணிவண்ணன் ,மாவட்ட துணைத்தலைவர் மகேஷ்குமார் , பச்சியப்பன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

தருமபுரி மாவட்டத்தில் 60 க்கும் மேற்பட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் அரசு சமூகநல விடுதிகள் உள்ளன.இங்கு சமையளர்கள் ,காவலர்கள் ,தூய்மை பணியாளர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன.காலிபணியிடங்களை நிரப்ப வேண்டும்.பணியாற்றிவரும் தூய்மை பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கவேண்டும்.பல விடுதிகளில் காவலர்கள்இல்லாமல் காலிபணியிடங்களாக உள்ளன.இதனால் மாணவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது.அதே போன்று விடுதிகளில் சமையளர்கள் ஒரே ஒருவர் மற்றும் பணியாற்றுகின்றனர்.இதனால் மாணவர்களுக்கு உரிய நேரத்தில் சமைத்து தருவது காலதாமதமாகிறது.மேலும் சமையலர் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.எனவேகாலிப்பணியிடங்களை நிரந்தர பணியாக நியமணம் செய்ய வேண்டும்.தேர்தல் கால வாக்குறுதியான பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

