தருமபுரி செப் 26- ல் வாக்கு திருட்டை கண்டித்து இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்.
வாக்கு திருட்டை கண்டித்து இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தருமபுரியில் செப்-26 ல் தருமபுரி தலைமை தபால் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாவட்ட செயலாளர் ஜே. பிரதாபன் விடுத்துள்ள அறிக்கையின் விபரம் பின்வருமாறு
வாக்கு திருட்டை கண்டித்தும்,ஒன்றிய மின் திட்டத்திலிருந்து விலக மின் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தியும், கல்வித்துறைக்கு விடுவிக்க வேண்டிய ரூ 2,152 கோடியை விடுவிக்க வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்டத்தின் கீழ் வேலை அட்டை பெற்ற அனைவருக்கும் வேலை வழங்க- ஆண்டுக்கு 4.50 லட்சம் கோடி நிதி ஒதுக்க வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செப் – 26 ல் தருமபுரி மாவட்ட தலைமை தபால் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்ட செயலாளர் ஜெ. பிரதாபன் தலைமை வகிக்கிறார்.
மாநிலத் தலைவர் ப .கி .பட்டாபிராமன் அவர்கள் கோரிக்கைகளை விளக்கி சிறப்புரையாற்றுகிறார், கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர்கள் ஜி. மாதையன்,சி.பாலன், மாவட்ட பொருளாளர் எ .அலமேலு, கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் எஸ் .சுந்தரம், தருமபுரி மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்கள்
பி.இரவி,ஆர்.இலட்சுமணன்,எஸ்.கிருஷ்ணன்,அழகேசன்,ஜி.பச்சாகவுண்டர், எல்.சி.கிருஷ்ணன,ஜி.ராஜகோபால்,
வெ.பை .மாதையன்,வி .செல்வம் ஆகியோர் விளக்கி பேசுகின்றனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு,பொதுமக்கள்ஆதரவு தரவேண்டும். இவ்வாறு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

