மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: அரசு விடுதிகளில் பணியாளர்களை வெளி முகமை மூலம் தேர்வு செய்வதை கைவிட்டு நிரந்த பணியில் தேர்வு செய்ய காப்பாளர் ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல். 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > தமிழ்நாடு > அரசு விடுதிகளில் பணியாளர்களை வெளி முகமை மூலம் தேர்வு செய்வதை கைவிட்டு நிரந்த பணியில் தேர்வு செய்ய காப்பாளர் ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல். 
தமிழ்நாடு

அரசு விடுதிகளில் பணியாளர்களை வெளி முகமை மூலம் தேர்வு செய்வதை கைவிட்டு நிரந்த பணியில் தேர்வு செய்ய காப்பாளர் ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல். 

Social Vision
Last updated: 2025/08/31 at 11:19 AM
Social Vision
Share
5 Min Read
SHARE
அரசு விடுதிகளில் பணியாளர்களை வெளி முகமை மூலம் தேர்வு செய்வதை கைவிட்டு நிரந்த பணியில் தேர்வு செய்ய காப்பாளர் ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல். 
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிறப்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபாண்மையினர் நலத்துறை காப்பாளர் ஆசிரியர் சங்கத்தின் மாநில சிறப்பு செயற்குழு கூட்டம், ஆக 31 அன்று விழுப்புரம் ஏ. எஸ் .ஜி கூட்டரங்கில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு நிறுவன தலைவர் எல். சகாதேவன், மாநில செயல்தலைவர் எம். முருகேசன், மாநில தலைவர் கே. நாராயண சாமி, மாநில முதன்மை செயலாளர் என். மணிமொழி ஆகியோர் தலைமை வகித்தனர்.
மாநில பொதுச்செயலாளர் இ. வேல்முருகன், மாநில பொருளாளர் ஆர். பாலமுருகன், மாநில பொருளாளர் ஏ. கலியமூர்த்தி, ஆகியோர் சிறப்புரையாற்றினார். மாநில இணை செயலாளர் செ.தினமணி, மாநில இணை ஒருங்கிணைப்பாளர் மு.அன்பழகன் ஆகியோர் தீர்மானம் குறித்து பேசினர்.விழுப்புரம் மாவட்ட பொருளாளர் யுவராஜ், கடலூர் மாவட்ட பொருளாளர் எஸ். மாரியப்பன், மாநில துணைத்தலைவர் எஸ். லாரன்ஸ், விழுப்புரம் மாவட்ட செயலாளர் ஏ. பிராங்ளின், ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், சமையலர் சங்க நிர்வாகிகள், விடுதி காவலர் சங்க நிர்வாகிகள் மற்றும் விடுதி தூய்மை பணியாளர்கள் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இத்துறை விடுதிகளுக்கு எந்தவொரு பணியிடத்திற்கும் குறிப்பாக சமையலர், காவலர்/ ஏவலர் மற்றும் விடுதி தூய்மை பணியாளர் ஆகியவர்களை வெளிமுகமை மூலம் தேர்வு செய்யப்படாமல், முறையான காலமுறை ஊதிய விகிதத்தில் நிரந்தர பணியிடங்களை உருவாக்கி அரசாணை பிறப்பிக்கப்பட வேண்டுமென்றும், இந்த ஆண்டு நிதி அறிக்கையில் அறிவிக்கப்பட்ட ஐந்து புதிய விடுதிகளுக்கும், வெளிமுகமையின் மூலம் விடுதி பணியாளர்களை தேர்வு அரசாணையை ரத்து செய்யவேண்டும்.
சென்னை, மதுரை, திருச்சி போன்ற பெரு நகரங்களில் உள்ள விடுதி மாணவர்களுக்கு ஒரு பொதுவான சமையல் கூடத்திலிருந்து உணவு தயாரிக்கப்பட்டு மாணவர்களுக்கு வேன் மூலம் சப்ளை செய்யப்பட வேண்டுமென்ற இந்த அரசாணையை ரத்து செய்துவிட்டு, தற்போதுள்ள நடைமுறையே தொடரவேண்டுமென இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது. புதிய உணவு வழங்கும் நடைமுறையில் உணவு வழங்கப்படும் பட்சத்தில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டு, மாணவர்களின் கல்வி நலன் பாதிக்கப்படக்கூடிய வாய்ப்பு உள்ளது. அரசாணை (நிலை) எண்: 26 நாள்: 25.01202 2 அன்று பிறப்பிக்கப்பட்ட அரசாணையின் படி முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளான 03.06.2022 முதல் மாணவர்களுக்கு சத்தான சரிவிகித உணவு வழங்கப்பட்டு, வருகிறது. மேலும் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு வகையான உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்த உணவு மாணவர்களின் விரும்பும் வகையில் உள்ளது. தற்போது பள்ளி விடுதி மாணவர் ஒருவருக்கு உணவு கட்டணம் ரூ.1400/-ம், கல்லூரி விடுதிகளுக்கு மாணவர் ஒருவருக்கு மாதம் ரூ.1500/- வழங்கப்பட்டு வருகிறது. வெளிமுகமை மூலம் உணவு தயார் செய்து வழங்கும் போது அரசுக்கு கூடுதல் நிதி சுமை ஏற்படுகிறது. இதனால் திராவிடல் மாடல் ஆட்சியின் கொள்கைக்கு மாறாக தனியார் மயமாக்குதலை கைவிட வேண்டுமென இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.
விடுதியில் புதிய மாணவர்களை தேர்வு செய்யும் போது, மாணவர்கள் 8-கி.மீட்டர் தூரத்திற்கு மேல் இருக்க வேண்டுமென்ற நடைமுறையை ரத்து செய்துவிட்டு, பெண்கள் விடுதிகளுக்கு உள்ள நடைமுறையை மாணவர்கள் விடுதிகளுக்கும் நடைமுறைபடுத்த வேண்டும். என்றும் தற்போது தமிழகத்தில்உள்ள பெரும்பாலான பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் 8-கி.மீட்டர் தூரத்திற்குள் உட்பட்டவர்களே பயின்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், 8-கி.மீட்டர் தூரத்திற்கு குறைவாக உள்ள ஏழை, எளிய மாணவர்கள் தங்கி பயின்று பயன்பெறும் வகையில் அரசாணை பிறப்பிக்கப்படவேண்டுமென இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.
காலியாக உள்ள காப்பாளர்கள்/ காப்பாளினிகள், காவலர் மற்றும் சமையலர், விடுதி தூய்மை பணியாளர்களை உடனடியாக நிரப்ப வேண்டுமெனவும், மதுரை கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர், முதுகலை பட்டதாரி ஆசிரியர்களின் பணியிடங்களுக்கு பள்ளி கல்வி துறையிலிருந்து ஆசிரியர்கள் துறை மாறுதல் பெற தடையின்மை சான்றை வழங்கும் நடைமுறைகளை எளிமைப்படுத்த வேண்டுமென்ம், மேலும், கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கும் போது, மனமொத்த மாறுதல் வேண்டுமென்ற நடைமுறையை கைவிட வேண்டுமென்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தற்போது சமையல் பணியில் உள்ள சமையலர்கள் காப்பாளர்களுக்கான தகுதி பெற்றிருப்பின் அவர்களுக்கு காலியாக உள்ள காப்பாளர் பணியிடங்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டுமென்றும், தற்பொழுது, அதிகப்படியான காலி இடங்கள் உள்ள காரணத்தால், சமையல் பணியில் உள்ளவர்களுக்கு காப்பாளர்களாக பதவி உயர்வு வழங்கவேண்டுமென்றும் கேட்டுக்கொள்கிறோம். மேலும், விடுதிகளில் பணிபுரியும் அனைத்து தூய்மை பணியாளர்களுக்கும் ஒரே சமமான காலமுறை ஊதியத்தை வழங்கவேண்டும் எனவும், தூய்மை பணியாளர்களை வெளி முகமை மூலம் தேர்வு செய்யக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறது.
ஆதிதிராவிடர் நலத்துறையில் பள்ளிகள் மற்றும் விடுதிகளை பராமரிப்பு செய்ய தற்போது தாட்கோ நிர்வாகம் மூலம் கட்டிட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பிற்பட்டோர் நல விடுதிகளில் பொதுபணித்துறை மூலமாக பராமரிப்பு பணிகளை செய்ய பணிக்கப்படுகிறது. ஆனால், அவர்கள் நிதி ஒதுக்கீடு சரியான அளவில் கிடைக்கவில்லை என்று பணியில் தொய்வு ஏற்பட்டு விடுதி கட்டிடங்கள் பராமரிப்ப இன்றி பழுதடைந்து உள்ளது. பொதுப்பணிதுறை மூலம் செய்து வரும் நடைமுறையை ரத்து செய்துவிட்டு பிற்பட்டோர் நலத்துறைக்கு என ஒரு தனிப்பிரிவை உருவாக்க வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், விடுதிகளில் ஏற்படுகின்ற மின்பழுதுகள், தண்ணீர் குழாய் உடைப்புகளை சரி செய்வதற்கு ஒரு மாவட்டத்திற்கு 2-மின் பணியாளர்களையும், 2-பிளம்பர்களையும் நிரந்தர காலமுறை ஊதியத்தில் நியமனம் செய்யப்பட வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.
அனைத்து விடுதிகளுக்கும் நிரந்தரமாக காலமுறை ஊதியத்தில் விடுதி காவலர் பணியிடங்களை உருவாக்க அரசாணை பிறப்பிக்கப்பட வேண்டுமெனகேட்டுக்கொள்ளப்படுகிறது.அனைத்து கல்லூரி விடுதிகள், பொறியியல் கல்லூரி விடுதிகள், மருத்துவ கல்லூரி விடுதிகள், தொழில்நுட்ப கல்லூரி விடுதிகள் மற்றும் தொழிற்பயிற்சி கல்லூரி விடுதிகள் அனைத்திற்கும் முதுநிலை பட்டதாரி பணியிடங்களாக தரம் உயர்த்த வேண்டுமெனவும், அதில் தற்போது பணிபுரிந்து வரும் பட்டதாரி காப்பாளர்களின் தகுதி மற்றும் பணிமூப்பு அடிப்படையில் முதுகலை பட்டதாரி காப்பாளர்களாக தரம் உயர்த்தி பதவி உயர்வு வழங்கவேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தற்போது, விடுதி மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்தவும், மாணவர்களுக்கு தரமான நல்ல அரிசி வழங்கவேண்டுமெனவும், விடுதிகளுக்கு தேவையான மளிகை பொருட்கள், மாமிசம், பால், முட்டை ஆகியவற்றை அரசு கூட்டுறவு சங்க நிறுவனங்கள் மூலம் வழங்கப்பட வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம். தற்போது, தமிழக சிறை கைதிகளுக்கு வழங்கப்படும் உணவு கட்டண தொகையை விட எதிர்கால இந்தியாவை உருவாக்கும் விடுதி மாணவர்களுக்கு உணவு கட்டணத்தை உயர்த்தி வழங்கவேண்டுமென கேட்டுக்கொள்கிறோம். விடுதி மாணவர்களின் வேலை வாய்ப்புகளுக்கு வளாக நேர்காணல் நடத்த வேண்டுமெனவும், அவர்களின் வேலை வாய்ப்பு மற்றும் உயர் கல்வி கற்பதற்கு அரசின் 7.5 சதவீத இடஒதுக்கீட்டிலிருந்து 2 சதவீதத்தை உள்ஒதுக்கீடுசெய்யப்படவேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.
கடந்த 10-ஆண்டுகளுக்கு மேலாக காப்பாளர் சங்க கோரிக்கைகள், விடுதி நிர்வாகம் பற்றி பேச்சுவார்த்தை அரசுடன் நடத்த அமைச்சர், செயலர் மற்றும் ஆணையர்கள் ஆகியோரிடம் நேரடியாகவும், கடிதம் மூலமும், நேரம் ஒதுக்க விண்ணப்பித்தும் எங்களுக்கு எவ்வித அழைப்பும் அரசிடமிருந்து வரவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொண்டு, இத்துறையின் கோரிக்கைகளையும், பிரச்சினைகளையும் அரசிற்கு தெரிவிக்கும் வகையில்  செப்டம்பர் மாதத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை இயக்குனர் அலுவலகம் முன்பு அமைதியாக முறையில் அறவழியில் உண்ணாவிரத போராட்டம் நடத்துவது என இச்செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
Social Vision August 31, 2025 August 31, 2025
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideo #viralshort #socialvisiontv
#shorts #shortsfeed #shortsviral #breakingnews #viral #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #viral #viralshort #viralvideoshorts #socialvisiontv
#shortsfeed #shortsviral #breakingnews #shortvideo #viral #viralvideo #socialvisiontv
#shortsfeed #shortsviral #shortvideo #breakingnews #viralvideos #viralvideoshorts #tngea #livenews
#shortsfeed #shortsviral #shortvideo #viralvideos #viral #viralshorts #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

மாவட்டங்கள்

அரசு பணி தேர்வில் தேர்ச்சி பெறாத விரத்தியில் ஒரு குழந்தையின் தாய் தூக்கிட்டு தற்கொலை 

November 10, 2024
ஆன்மிகம்

அருள்மிகு ஸ்ரீ சௌடேஸ்வரி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேக பெருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

February 8, 2026
கல்வி & வேலைவாய்ப்பு

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு கையடக்கக் கணினி:  மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி வழங்கினார்.

July 6, 2024
சாதனையாளர்கள்

திறமையாக சாதனை செய்த குழந்தைகள் பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் விருது பெற விண்ணப்பிக்கலாம் 

May 25, 2024
ஆரோக்கியம்

கரு கலைப்பை தடுக்க ஸ்கேன் மையங்களில் ஆய்வு நடத்த அலுவலர்களுக்கு ஆட்சியர் அறிவுரை

March 1, 2024
அரசியல்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழா -1000 நபர்களுக்கு வேட்டி-சேலைகள் மற்றும் அன்னதானம் வழங்கிய முன்னாள் அமைச்சர் கே.பி அன்பழகன் எம்எல்ஏ

February 24, 2025

மேலும் படிங்க

தமிழ்நாடு

தருமபுரியில் காங்கிரஸ் சார்பில் கர்மவீரர் காமராஜர் பிறந்தநாள் விழா 

July 15, 2026
தமிழ்நாடு

பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி தமிழக விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

July 15, 2026
தமிழ்நாடு

தருமபுரி மாவட்டத்தில் 4 புதிய ஊராட்சி ஒன்றியங்களை உருவாக்க வேண்டும்: ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கம் வலியுறுத்தல்

July 5, 2026
தமிழ்நாடு

குரு வட்ட அலுவலர்களுக்கு 6 மாத ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும்:தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு வலியுறுத்தல்

June 28, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?