ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பால் குளிக்க, பரிசல் இயக்க தடை
கர்நாடகா மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள கிருஷ்ணராஜசாகர் (கே.ஆர்.எஸ்.), கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.பாதுகாப்பு கருதி இந்த இரு அணைகளில் இருந்து தமிழக காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு ஆக-30 அன்று 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து இருந்தது.மேலும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆக-31 அன்று காலை 8 மணி நிலவரப்படி 24 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
இதனால் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
நீர்வரத்து அதிகரிப்பால் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்கவும் படகு சவாரி செய்யவு மாவட்ட நிர்வாகம் தடைவித்துள்ளது.
விடுமுறை தினமான இன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் காவிரி ஆற்றில் குவிந்தனர். அருவியில் குளிக்க தடைவிதிக்கப்பட்டதால் பரிசல் பயணம் செய்து காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர். பின்னர் அவர்கள் ஆற்றின் கரையோரம் நின்று காவிரி ஆற்றில் பாயும் தண்ணீரை ரசித்து மகிழ்ந்தனர். மீன் சாப்பாடு வாங்கி கொண்டு பூங்காவில் அமர்ந்து சாப்பிட்டனர்.

