தருமபுரி மாவட்ட எஸ்சி, பிரிவு மாவட்ட செயற்குழு கூட்டம்.
தருமபுரி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி எஸ்சி, துறை சார்பாக ஆ – 25 செயற்குழு கூட்டம். தருமபுரி அதியமான் அரமனை அரங்கில் நடைபெற்றது.
மாவட்ட தலைவர் சம்பத்குமார் தலைமை வகித்தார்.
மாவட்ட பொதுச்செயலாளர் எஸ். தமிழ்வாணன் வரவேற்றார்.
மாநில பொதுச்செயலாளர் இராமசுந்தரம், மாநில செயலாளர் முத்துசாமி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலதுணைத்தலைவர் வழக்கறிஞர் தினகரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். இக்கூட்டத்தில் மாவட்ட, தொகுதி, வட்டார கமிட்டி எஸ்டி துறை தலைவர்கள் எவ்வாறு செயல்பட வேண்டுமென்று பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
3 ஆண்டுகள் நிறைவு பெற்று சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி எஸ்சி துறையின் மாநில தலைவர் எம்பி .ரஞ்சன் குமார் அவர்களை தருமபுரி மாவட்ட எஸ்சி துறையின் சார்பாக பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

வருகின்ற செப்டம்பர் 9 ஆம் தேதி சத்தியமூர்த்தி பவன் சென்னையில் நடைபெறுகின்ற மாநில செயற்குழு கூட்டத்திற்கு மாவட்ட தொகுதி வட்டார நிருவாகிகள் பெரும் திரலாக கலந்து கொள்ள இச்செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் தூத்துக்குடியில் ஆறுமுக நகரில், நடைபெற்ற, கவின் ஆணவபடுகொலையை வன்மையாக கண்டித்தும், தமிழக அரசு சிறப்பு சட்டம் இயற்றவேண்டுமென இச்செயற்குழுவில் வலியுறுத்துகிறது
இக்கூட்டத்தில் பி.குமரவேல், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளர் காளியம்மாள் முன்னாள் மாவட்ட தலைவி மகிளா காங்கிரஸ், தங்கவேல் ஐஎன்டியுசி மண்டல தலைவர் மற்றும் மாவட்ட துணை தலைவர் கே.மாதேஸ்வரன் மாவட்ட பொருளாளர் எஸ்சி துறை, திருஞானச்செல்வி, கடத்தூர் நகர தலைவர் கே.டி. முருகன் , தொகுதி தலைவர்கள் தருமபுரி யுவராஜ், பாப்பிரெட்டிபட்டி முத்து ,அரூர் தேவராஜ்,பென்னாகரம் அன்புகுமார் , பாலக்கோடு சங்கீதா ஆகியோர் கலந்துகொண்டனர்.நிர்வாகி டி. கலைச்செல்வன் நன்றி கூறினார்.

