பாலக்கோட்டில் “நலம் காக்கும் ஸ்டாலின்” என்ற முழு உடல் பரிசோதனை மருத்துவ முகாம் ஆட்சியர் ரெ. சதீஷ் பார்வையிட்டார்.
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற “நலம் காக்கும் ஸ்டாலின்” என்ற முழு உடல் பரிசோதனை மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.சதீஸ், ஆக – 23.அன்று பார்வையிட்டார்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் 21.04.2025 அன்று உயர் மருத்துவ சேவைகள் வழங்க மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என்று ”நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் கடந்த 02.08.2025 அன்று தொடங்கி வைக்கப்பட்டது.
தருமபுரி மாவட்டத்தில் ஆகஸ்டு மாதம் முதல் டிசம்பர் 2025 வரை வட்டாரத்திற்கு 3 உயர் மருத்துவ சேவை முகாம்கள் வீதம் மொத்தம் 30 முகாம்கள் நடத்தப்பட உள்ளது. இன்றைய தினம் பாலக்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் காலை 09.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நடைபெறுகிறது. “நலம் காக்கும் ஸ்டாலின்” என்ற முழு உடல் பரிசோதனை மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டார்கள்.
மேலும், இம்மருத்துவ முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ சேவைகள், ஆலோசனைகள் மற்றும் பரிசோதனைகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டார்கள்.
”நலம் காக்கும் ஸ்டாலின்” மருத்துவ முகாமின் மூலம் அனைத்து வகையான உடல் பரிசோதனைகளும், 17 வகையான சிறப்பு மருத்துவ சிகிச்சைகளும், முதல்வரின் விரிவான காப்பீடு திட்ட அட்டை மற்றும் மாற்று திறனாளிகளுக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது. பரிசோதனைக்கு வரும் அனைத்து நபர்களுக்கும் ஆபா கார்ட் (ABHA CARD) உருவாக்கப்படும்.

”நலம் காக்கும் ஸ்டாலின்” உயர் மருத்துவ சேவை முகாமில் பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, எலும்பு முறிவு மருத்துவம், பேறுகால மருத்துவம், குழந்தை நல மருத்துவம், இதயநல சிறப்பு மருத்துவம், நரம்பியல் சிறப்பு மருத்துவம், நுரையீரல் சிறப்பு மருத்துவம், நீரிழிவு நோய்கான சிறப்பு மருத்துவம், தோல் சிறப்பு மருத்துவம், பல் மருத்துவம், கண் சிறப்பு மருத்துவம், காது மூக்கு தொண்டை மருத்துவம், மனநல மருத்துவம், இயன்முறை மருத்துவம், இயற்கை மருத்துவம், உணவியல் ஆலோசணை ஆகிய 17 சிறப்பு மருத்துவ சிகிச்சைகள், சிறப்பு மருத்துவ நிபுணர்களால் வழங்கப்படுகிறது.
கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலுட்டும் தாய்மார்கள் வளர்ச்சி குன்றிய குழந்தைகள், நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள், இதய நோயாளிகள், படுக்கையுற்ற நோயாளிகள் மற்றும் மாற்றுதிறனாளிகளை இலக்காக கொண்டு இம்முகாம்கள் நடத்தப்படுகின்றது.
இம்முகாமில் பரிசோதனைக்கு வரும் அனைத்து நபர்களுக்கும் ஆபா கார்ட் (ABHA CARD) உருவாக்கப்படும். முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுஅட்டைக்கு (CMCIS) பதிவு செய்துதரப்படும். முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் (MCIIS) கீழ் மேல் பரிசோதனைகளுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும். இம்மருத்துவ முகாமில் மாற்றுத்திறனாளிகள் சான்றிதழ் (DISABILITY CERTIFICATE) வழங்கப்படும். கண்புரை உள்ள நோயாளிகள் அறுவை சிகிச்சைக்கு தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.
இம்முகாமில் தலைசிறந்த மருத்துவ நிபுணர்களால் பரிசோதனை செய்து சிகிச்சை மற்றும் மருந்துகள் இலவசமாக வழங்கப்படும். மேலும், பல்வேறு மருத்துவ முகாம்களின் மூலம் நோயாளிகளை பரிசோதித்து சிறப்பு மருத்தவ சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்கு நலம் காக்கும் ஸ்டாலின் பல்நோக்கு மருத்துவ முகாமில் கலந்து கொள்ள செய்து, பயனடைய மருத்துவ குழு மூலம் ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அனைத்து பொதுமக்களும் ”நலம் காக்கும் ஸ்டாலின்” உயர் மருத்துவ சேவை முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இந்நிகழ்வின்போது, மாவட்ட சுகாதார அலுவலர் மரு.பூபேஷ், இணை இயக்குநர் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் மரு.சாந்தி, பாலக்கோடு பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி, அரசுத்துறை அலுவலர்கள், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பொதுமக்கள் உடனிருந்தனர்.

