மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: தருமபுரி மருத்துவக்கல்லூரி தூய்மைபணியாளர்களுக்கு வாரவிடுப்பு வழங்க கோரி ஏஐசிசிடியு ஆட்சியரிடம் மனு. 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > தமிழ்நாடு > தருமபுரி மருத்துவக்கல்லூரி தூய்மைபணியாளர்களுக்கு வாரவிடுப்பு வழங்க கோரி ஏஐசிசிடியு ஆட்சியரிடம் மனு. 
தமிழ்நாடு

தருமபுரி மருத்துவக்கல்லூரி தூய்மைபணியாளர்களுக்கு வாரவிடுப்பு வழங்க கோரி ஏஐசிசிடியு ஆட்சியரிடம் மனு. 

Social Vision
Last updated: 2025/07/28 at 7:36 PM
Social Vision
Share
2 Min Read
SHARE
தருமபுரி மருத்துவக்கல்லூரி தூய்மைபணியாளர்களுக்கு வாரவிடுப்பு வழங்க கோரி ஏஐசிசிடியு ஆட்சியரிடம் மனு. 
தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தூய்மைப் பணியாளர்களின் நீண்டகால கோரிக்கைகள் நிறைவேற்ற கோரி அகில இந்திய தொழிற்சங்க மைய கவுன்சில் (ஏஐசிசிடியு) சார்பில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஷிடம் மனு கொடுத்தனர்.
 மனுவின் விபரம் பின்வருமாறு
தருமபுரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பதினைந்து வருடங்களுக்கு மேலாக 188 பழைய தூய்மைப்பணியாளர்களும். 200 புதிய தூய்மைப் பணியாளர்களும் மருத்துவக்கல்லூரிமருத்துவமனையில்தூய்மைப்பணியில் நாள்தோறும் ஈடுபட்டு வருகின்றனர்.188  பணியாளர்கள் காலைப்பணியிலும், 55 பணியாளர்கள் மதியப்பணியிலும் மற்றும் 55 பணியாளர்கள் இரவுநேரப் பணியிலும்தொடர்ந்துமருத்துவக்கல்லூரிமருத்துவமனையில்தூய்மைப்பணியை செய்து வருகிறார்கள்.
இந்த தூய்மைபணியாளர்களுக்கு  உரிய நேரத்தில் வருகைப்பதிவேடு நிர்வாகமம் பராமரிக்கவில்லை. 10. 15 ஆண்டுகளாக காலைப்பணிக்கு 7.00 மணிக்குள் கையொப்பமிட்டு வந்தார்கள். ஆனால் தற்போது அதிகாலை 5.30 மணிக்கு கையொப்பம் இடவேண்டும் என்று கிரிஸ்டல் நிர்வாகத்தின் மேலாளர் மற்றும் மேற்பர்வையாளர்கள் பணியாளர்களை நிர்பந்திக்கின்றனர். தொலை தூரத்திலிருந்து வரும் ஒருசில பணியாளர்களால் அதிகாலை 5.30 மணிக்கு கையொப்பமிட முடிவதில்லை. இந்த அதிகாலை 5.30 மணி கையொப்பம் என்பது சட்டத்திற்குப் புறம்பானது. அப்படி கையொப்பமிடாத 10. 15 தொழிலாளர்களை நாள்தோறும் வீட்டிற்குத் திருப்பி அனுப்புகிறார்கள். இது தொழிலாளர்கள் மத்தியில் மன உளைச்சல் மற்றும் மனவேதனை ஏற்படுத்துகின்றது.
இரண்டு ஆண்டுகளாக சீருடைகள், புடவை, காலணி, கையுறை, மாஸ்க் போன்ற எந்த பாதுகாப்பு உபகரணங்களும் தூய்மைப் பணியாளர்களுக்குத் தருவதில்லை. பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாத காரணத்தால் தொற்றுநோய் ஏற்படக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது. பெண் தூய்மைப்பணியாளர்களுக்கு புடவை வழங்காமலேயே சீருடை அணிந்து வரவேண்டும் என்று நிர்பந்திக்கிறார்கள்.தற்செயல் விடுப்பு, வார விடுமுறை, பண்டிகை விடுமுறை மற்றும் அரசு விடுமுறை நாட்களில்தூய்மைப்பணியாளர்களுக்கு எந்த விடுமுறையும்அளிப்பதில்லை. அவசரமாக ஒருமணி நேரம் அனுமதி கேட்டால்கூட தருவதில்லை.
தூய்மைப்பணியாளர்களிடம் அவர்களின் சம்பளத்தில் மாதாமாதம் இஎஸ்ஐ பிடித்தம் செய்யப் படுகின்றது. ஆனால் இஎஸ்ஐ சலுகைகளை எந்த ஒரு தொழிலாளிக்கும் தர மறுக்கிறார்கள்.5. 10, 15 ஆண்டுகளாக பெண் தூய்மைப்பணியாளர்களுக்கு மேற்பர்வையாளர் பதவி தருவதில்லை. ஆனால் ஆண் தொழிலாளர்கள் 11 பேர் மட்டும் மேற்பார்வையாளர்களாக பணியாற்றி வருகின்றனர். பெண்களை மேற்பார்வையாளர்களாக நியமிக்க நிர்வாகம் தயாரில்லை. படித்த தூய்மைப்பணியாளர்களை (பெண்கள்) மேற்பார்வையாளர்களாக நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.
புதியதாக சேர்ந்த தூய்மைப்பணியாளர்களுக்கு 2 மாதகாலமாக ஊதியம் வழங்காத நிலையிலும் அவர்கள் தொடர்ந்து தூய்மைப்பணியை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நிர்வாகம் என்பது முதன்மையான வேலை அளிப்பவர் ஆவார். தொழிலாளர்களின் கோரிக்கைகளை முதன்மை வேலை அளிப்பவர் செவிகொடுத்துக்கூட கேட்பதில்லை. ஆனால் தொழிலாளர்களின் சிறுசிறு பிரச்சனைகளுக்கு முதன்மை வேலை அளிப்பவர் மெம்மோ கொடுக்க ஆர்வம் காட்டுகிறார்கள்.எனவே தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகள் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
அகில இந்திய தொழிற்சங்க மைய கவுன்சில் (ஏஐசிசிடியு) தருமபுரி மாவட்ட செயலாளர் சி. முருகன், மாவட்ட தலைவர் கொ. கோவிந்தராஜ் உள்ளிட்ட தூய்மை பணியாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.
TAGGED: தருமபுரி மருத்துவக்கல்லூரி தூய்மைபணியாளர்களுக்கு வாரவிடுப்பு வழங்க கோரி ஏஐசிசிடியு ஆட்சியரிடம் மனு.
Social Vision July 28, 2025 July 28, 2025
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
அகில இந்திய வேலைநிறுத்த ஆயித்தமாநாடு #socialvisiontv
#shorts #shortvideo #shortfeed #socialvisiontv
#shortvideo #shortfeed #shorts #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #breakingnews #socialvisiontv
Social Vision TV
#shortvideo #shortfeed #shorts #socialvisiontv #dmk
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

அரசு நல திட்டம்

புதிய பாலம் அமைக்கும் பணி துவக்கம்

November 8, 2025
மாவட்டங்கள்

பொம்மிடியில் ரயில் பயணிகள் நலச் சங்க கூட்டம். 

March 4, 2025
தமிழ்நாடு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ,வெற்றிதுரைசாமி உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி

February 13, 2024
அரசியல்

நீட்டை ஒழித்துக்கட்டும் நாள் வெகுதொலைவில் இல்லை! தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் 

June 7, 2024
மாவட்டங்கள்

கள்ளச்சாரயத்தை தடுக்க தவறிய தமிழ்நாடு அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் 

June 21, 2024
ஆரோக்கியம்

உடல் எடையை குறைக்க வேண்டுமா இந்த முறையை பின்பற்றுங்கள்.

January 9, 2024

மேலும் படிங்க

தமிழ்நாடு

தருமபுரி பழைய பேருந்து நிலைய வியபாரிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வியபாரிகள் வலியுறுத்தல். 

February 7, 2026
தமிழ்நாடு

தருமபுரி நகராட்சி புதிய பேருந்து நிலையத்தினை காணொலிக் காட்சி வாயிலாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்‌.

February 5, 2026
தமிழ்நாடு

தருமபுரி வனக்கோட்டத்தில் இரைக்கொல்லி பறவைகள் கணக்கெடுப்பு தீவிரம்

February 5, 2026
தமிழ்நாடு

முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைக்க உள்ள தருமபுரி பேருந்து நிலையத்தை   மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஷ் நேரில் ஆய்வு 

February 3, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?