ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 1 இலட்சத்து 26 ஆயிரம் கனஅடிநீர் வரத்து
கர்நாடக மாநிலம் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபிணி அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளது மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டினம் தாலுகா கிருஷ்ணராஜசாகர் அணை நிலவரப்படி நீர்வெளியேற்றம
85952 கனஅடிநீர் வெளியேற்றப்படுகிறது.ஹாசன் மற்றும் சிக்மகளூரு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து கொண்டிருக்கிறது கிருஷ்ணராஜ் சாகர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துக் கொண்டுவருகிறது
அணையின் பாதுகாப்புக்குகருதி அணை ஏற்கனவே நிரம்பிள்ளதால் வரும் நீர்அணைத்தும் உபரிநீராக வெளியேற்றப்பட்டு வருகிறது.

கேரள மாநில வயநாடு பகுதியில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் கபிணி அணையும் நிரம்பியுள்ளது இதனை தொடர்ந்து கபிணி அணையில் இருந்து சுமார் 40 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது
கே ஆர் எஸ் மற்றும் கபிணி அணைகளில் இருந்து தற்போது ஒரு லட்சத்து 26 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது

