உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் கலந்துகொண்ட பயனாளிகளுடன் முதல்வர் ஸ்டாலின் கலந்துரையாடல்.
சென்னை அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (23.7.2025)மருத்துவமனையிலிருந்து காணொலிகாட்சி வாயிலாக, “உங்களுடன் ஸ்டாலின்” திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து கன்னியாகுமரி, காஞ்சிபுரம், கோயம்புத்தூர் ஆகிய மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் ஆய்வு மேற்கொண்டபோது, “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்களில் கலந்துகொண்ட பயனாளிகளிடம் கோரிக்கைகள் குறித்த விவரங்களை கேட்டறிந்து கலைந்துரையாடினார்.

இந்த ஆய்வின்போது, தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

