தருமபுரி பெருந்தலைவர் காமராசர் பிறந்தநாளில் பள்ளி மாணவர்கள் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள்
தருமபுரி கோல்டன் தெருவில் பெருந்தலைவர், கர்மவீரர் காமராஜர் அவர்களின் 123 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா காங்கிரஸ் கட்சி எஸ்சி/எஸ்டி பிரிவு தருமபுரி சட்டமனற தொகுதி சார்பில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தருமபுரி சட்டமன்ற தொகுதி தலைவர் கே. யுவராஜ் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் தமிழ்வானன், சிறப்பு அழைப்பளர்களாக இந்திய தேசிய காங்கிரஸ் மாநில செயலாளர் வீரமுனிராஜ் மாநில பொதுச்செயலாளர் இராமசுந்தரம்,மாவட்டபொதுச்செயலாளர் குமரவேல், மாவட்ட தலைவர் சம்பத் குமார், மாவட்ட துணைத்தலைவர் கலை செல்வன், மாநில இளைஞர் காங்கிரஸ் செயலாளர் தீபகுமார், தருமபுரி மாவட்ட பொதுச்செயலாளர் திருஞான செல்வி, தருமபுரி தொகுதி துணைத்தலைவர் ஜெய வேல், மற்றும் ஜெய் பீம் மக்கள் நல அமைப்பினர் பங்கேற்று பெருந்தலைவர் காமராசர் திருஉருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். அதனை தொடர்ந்து பள்ளி ஏழை மாணவர்களுக்கு நோட்டு புத்தகம், பேனா வழங்கினர், முதியோருக்கு வேட்டி, சேலைகள் வழங்கினர்.

