தருமபுரி மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் ஜூலை -15 முதல் ஆகஸ்ட் 15 வரை முகாம்
மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட மூன்று கட்ட முகாம்களின் வெற்றியைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலுள்ள அனைத்து நகராட்சி / பேரூராட்சி கிராம பஞ்சாயத்துகளில் 10000 சிறப்பு முகாம்களை நடத்திட “உங்களுடன் ஸ்டாலின்” என்ற திட்டத்தினை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் இது குறித்து வழிகாட்டும் நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, பொதுமக்களுக்கு அதிக அளவில் தேவைப்படுவதாக கண்டறியப்பட்டுள்ள சேவைகளை வழங்கிட இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
மேற்குறித்த உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் மக்கள் வசிக்கும் பகுதிகளிலேயே சிறப்பு முகாம்கள் நடத்துவதன் மூலம் மனுக்கள் பெறப்பட்டு குறிப்பிட்ட கால அளவிற்குள் சேவைகளை வழங்கி பொதுமக்களின் குறைகளை நிவர்த்தி செய்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது. மேலும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விடுபட்ட தகுதி வாய்ந்த மகளிர்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கிட மனுக்கள் பெறப்பட உள்ளது.
மேற்குறிப்பிட்ட உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் தருமபுரி மாவட்டத்தில் அனைத்து நகராட்சி / பேரூராட்சி கிராம பஞ்சாயத்துகளில் ஜூலை 15 முதல் அக்டோபர் 15 வரை 176 முகாம்கள் நடைபெற இருக்கிறது. நாளை முதல் நகராட்சி / பேரூராட்சி / ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள அனைத்து வார்டு மற்றும் குக்கிராமங்கள் வாரியாக வீடு வீடாக சென்று பொதுமக்களிடம் மேற்கண்ட திட்டம் குறித்து தகவல் கையேடு மற்றும் விண்ணப்பங்கள் தன்னார்வலர்கள் மூலமாக வழங்கப்பட உள்ளது என பொது மக்களுக்கு தெரிவிக்கப்படுகிருது.என தருமபுரி மாவட் ஆட்சியர் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

