மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீனுக்கு   தகைசால் தமிழர் விருது அறிவிப்பு 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > இந்தியா > பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீனுக்கு   தகைசால் தமிழர் விருது அறிவிப்பு 
இந்தியா

பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீனுக்கு   தகைசால் தமிழர் விருது அறிவிப்பு 

Social Vision
Last updated: 2025/07/04 at 1:50 PM
Social Vision
Share
2 Min Read
SHARE
பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீனுக்குதகைசால் தமிழர் விருது அறிவிப்பு 
தமிழ்நாட்டிற்கும் தமிழினத்தின் வளர்ச்சிக்கும்பெரும்பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில், தகைசால் தமிழர் என்ற விருதை உருவாக்கவும், இந்த விருதிற்கான விருதாளரைத் தேர்வு செய்திட ஒரு குழுவை அமைத்திடவும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடந்த 2021-ல் ஆணையிட்டிருந்தார்.
இந்த விருதினை கடந்த 4 ஆண்டுகளில் சங்கரய்யா ,ஆர். நல்லகண்ணு, ஆசிரியர் வீரமணி மற்றும் முனைவர் குமரி அனந்தன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. இவ்விருதிற்கான நடப்பாண்டு விருதாளரைத் தேர்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட கலந்தாலோசனைக் கூட்டம் சென்னை, தலைமைச் குழுவின் செயலகத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் இன்று (4.7.2025) நடைபெற்றது.
இதில் மூத்த அரசியல் தலைவரும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் அன்புக்குரியவருமான பெரியவர். மணிச்சுடர் இதழின் ஆசிரியரும் இந்திய அரசியல் பற்றிய ஆழமான புரிதலுடன். சமூக நல்லிணக்கத்துக்காக தன் வாழ்நாளெல்லாம் உழைத்துவரும் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்களை பெருமைப்படுத்தும் வகையில் இவ்வாண்டிற்கான தகைசால் தமிழர் விருதுக்கு அவரது பெயர் பரிசீலிக்கப்பட்டு அவருக்கு இவ்விருதினை வழங்க முடிவு செய்யப்பட்டது.
மேலும், பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்கள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் ஆவார். தமிழ்நாட்டில் இவர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசியப் பொதுச் செயலாளரும், தமிழ் மாநிலத் தலைவராகவும் இருந்தவர். மனித நேய மாண்பாளர். பழகுவதற்கு இனிய பண்பாளர். அறிவார்ந்த சொற்பொழிவாளர். மனிதநேயத்திற்கும் மதநல்லிணக்கத்திற்கும் தம்மை அர்ப்பணித்துக் கொண்டவர்.
கோவையில் 2010-ஆம் ஆண்டு நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் தமிழ்நாட்டிற்கும், அரபகத்துக்கும் உள்ள தொடர்புகள் பற்றிய ஆய்வுக் கட்டுரை வழங்கியவர். எட்டாண்டுகள் தொடர்ந்து தாருல் குர்ஆன் இதழில் ‘தமிழர்க்கு இஸ்லாம் வந்த மதமா? சொந்தமா?’ எனும் தலைப்பில் தொடர் கட்டுரையை எழுதியவர். வாழும் நெறி, குர்ஆனின் குரல், இசுலாமிய இறைக்கோட்பாடு உட்பட ஆறு நூல்களை எழுதியவர். மேலும் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்கள், திருச்சி ஜமால் முகம்மது கல்லூரியில் 15 ஆண்டுகள் வரலாற்றுத்துறைப் பேராசிரியராகப் பணியாற்றியவர். கண்ணிய தென்றல் காயிதே மில்லத் காலீம் முதல் தொடர்ந்து சமூக நல்லிணக்கம் பரப்பி வரும் சிந்தனையாளர், பல நூறு பட்டதாரிகளை உருவாக்கி அவர்களின் வாழ்வினை உயரத்துக்கு உயர்த்திய ஆசானும் ஆவார்.
‘தகைசால் தமிழர் விருது’க்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்களுக்கு, பத்து இலட்சம் ரூபாய்க்கான காசோலையும் பாராட்டுச் சான்றிதழும் வருகிற ஆகஸ்ட் திங்கள் 15-ஆம் நாள் நடைபெறும் சுதந்திர தின விழாவில்  முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களால் வழங்கப்படும்.
TAGGED: பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீனுக்கு   தகைசால் தமிழர் விருது அறிவிப்பு
Social Vision July 4, 2025 July 4, 2025
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
அகில இந்திய வேலைநிறுத்த ஆயித்தமாநாடு #socialvisiontv
#shorts #shortvideo #shortfeed #socialvisiontv
#shortvideo #shortfeed #shorts #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #breakingnews #socialvisiontv
Social Vision TV
#shortvideo #shortfeed #shorts #socialvisiontv #dmk
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

மாவட்டங்கள்

விபத்தில் இறந்த ஊர்க்காவல் படைவீரரின் குடும்பத்துக்கு  . 17,00,000/- ற்கான வங்கி வைப்புத் தொகைபத்திரம் வழங்கப்பட்டது.

July 13, 2024
மாவட்டங்கள்

தருமபுரி காவல்துறை குறைதீர்க்கும் முகாமில் 95 மனுக்களுக்கு தீர்வு 

June 19, 2024
அரசியல்

மாதர் சங்க தலைவர் மைதிலி சிவராமன் நினைவு தினம் அனுசரிப்பு

May 30, 2024
குற்றம்

பாலியல் பலாத்காரம் செய்த இளைஞருக்கு 20 ஆண்டு சிறை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.

February 23, 2024
தமிழ்நாடு

புதுக்கோட்டையில் 43,993 பேருக்கு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

November 10, 2025
அரசு நல திட்டம்

தருமபுரி ஜன – ல் கழிவு செய்யப்பட்ட 3 கார்கள் ஏலம் 

December 27, 2024

மேலும் படிங்க

இந்தியா

ஜவகர்லால் நேரு அவர்களின்156 வது பிறந்த நாளில் தருமபுரில் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி நேரு திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

November 14, 2025
இந்தியா

இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட அனைத்து மீனவர்களை விடுவிக்க ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு  முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின்  கடிதம்

November 10, 2025
இந்தியாசினிமா

2027 பொங்கலுக்கு ரிலீசாகும் நடிகர் ரஜினிகாந்தின் “தலைவர் 173”

November 5, 2025
இந்தியா

வங்கி துறையை தனியார் துறைக்கு தாரைவார்க்கும் முயறச்சியை  ஒருபோதும் அனுமதிக்க முடியாது:கு.செல்வபெருந்தகை எம்எல்ஏ 

November 5, 2025

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?