தருமபுரி அதியமான் அரசு பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு
தருமபுரி அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிமேலான்மைக்குழு சார்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் மற்றும் அதிக தேர்ச்சி விகிதம் வழங்கிய ஆசியர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் காமராஜ் தலைமை வகித்தார்.
பள்ளிமேலான்மைக்குழு தலைவர் நூராணி,உறுப்பினர்கள் ராஜா, சக்திவேல், கணேசன், ஞானபிரகாசம், முதஸ்பா , பள்ளியின் உதவி தலைமை ஆசியர்கள் ராஜா, கபீர் , ஆகியோர் பேசினர்.
2024-2025 ம் ஆண்டு கல்வி ஆண்டில் 10 11,12 ம் வகுப்புகளித் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசும் அதிக தேர்ச்சி வழங்கிய ஆசியர்களுக்கு நினைவு பரிசு வழங்கினர்.

இப்பள்ளி மாணவர் 10 ம் வகுப்பு பொதுத்தேர்வில் அரசு பள்ளிகளில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்தார். மேலும் தேசிய திறனாய்வு தேர்வுகளில் உள்ளிட்ட பல்வேறு போட்டித் தேர்வுகளில் மாணவர்கள் அதிக அளவில்தேர்ச்சிப்பெற்றுள்ளனர்.இந்நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் பங்கேற்றனர்.

