மனித நேய மக்கள் கட்சியின் மதுரை மாநாட்டில் தருமபுரி மாவட்டத்திலிருந்து மக்கள் பெருந்திரளாக பங்கேற்க்க வேண்டும். மாவட்ட தலைவர் என். சுபேதார்.
இரட்டை கோரிக்கைகளை வலியுறுத்தி மனிதநேய மக்கள் கட்சி சார்பில் ஜூலை – 6 ம்தேதியன்றுமதுரையில் பேரணி மற்றும் மாநாடு நடைபெற உள்ளது.இம்மாநாட்டில் மக்கள் பங்கேற்பதற்காக ஏற்காடுகளை தருமபுரி மாவட்ட மனித நேய மக்கள் கட்சி தீவிர பணியில் ஈடுபட்டுள்ளது.
இது குறித்து மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் என். சுபேதார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஊராட்சி மன்றம் முதல் நாடாளுமன்றம் வரை இஸ்லாமியசிறுபான்மையினரின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த வேண்டும்.வாஃக்ப் ஒழிப்பு சட்டத்தை ரத்து செய்யவேண்டும் என இருண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 6 ம் தேதியன்று மதுரையில் பேரணி மற்றும் மாநாடு நடைபெற உள்ளது.
மதுரையில் நடைபெறும் எழுட்ச்சி பேரணி மற்றும் மாநாட்டை வெற்றியடைய செய்யும் வகையில்,
தருமபுரி மாவட்ட மனித நேய மக்கள் கட்சி தருமபுரி மாவட்டத்தில் முக்கிய இடங்களிலும் மக்கள் கூடும் இடங்களில் பேணர் வைத்து விளம்பரம் செய்துள்ளனர்.

மேலும் சுவர் விளம்பரங்கள் எழுதப்பட்டுள்ளன. மாநாட்டின் நோக்கம் குறித்து மனித நேய மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் என்.சுபேதார்,மாவட்ட செயலாளர் ஏ.நியாஸ், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மாவட்ட செயலாளர் டி.பி.பைரோஸ்,மனித நேய மக்கள் கட்சி மாவட்ட பொருளாளர் எம்.இதயத்துல்லா ஆகியோர் தலைமையிலான குழுக்கள் மக்களிடையே துண்டு பிரசுரம் வழங்கி மாநாட்டின் நோக்கம் குறித்து பிரச்சாரம் செய்துவருகின்றனர்.மேலும் மதுரை மாநாட்டில் பங்கேற்க்க மக்களை திரட்டி வருகின்றனர். பொதுமக்கள் ஆதரவு தரவேண்டும்.இவ்வாறு தெரிவித்தார்.

