தருமபுரி அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு ஜூலை 7 ல் கலந்தாய்வு
தருமபுரி அரசு கலைக்கல்லூரியில் 2025-2026 ஆம் ஆண்டிற்கான இளநிலைப் பட்டப்படிப்பிற்கான சேர்க்கைக் கலந்தாய்வு ஜூலை 7 அன்று தருமபுரி அரசு கலைக்கல்லூரி கலையரங்கத்தில் காலை 10:30 மணிக்கு அனைத்து பாடப் பிரிவுகளுக்கும் விண்ணப்பித்த அனைத்து மாணவர்களும் பங்கேற்கலாம்.
02.07.2025 அன்று வெளியிட்ட கல்லூரிக் கல்வி ஆணையரின் வழிகாட்டு வழிமுறைகளின் படி மீதமுள்ள சில காலியிடங்களுக்கு செயல்முறையில் உள்ள பத்தி 32 மற்றும் 33 இல் உள்ள வழங்கப்பட்டுள்ள வழிகாட்டுதலை பின்பற்றி மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
சேர்க்கையின்போது மாணவர்கள் பின்வரும் 7 நகல்கள் கொண்டுவர வேண்டும்.விண்ணப்பப்படிவம் , அசல் மாற்றுச்சான்றிதழ் , அசல் மற்றும் +2 மதிப்பெண் பட்டியல், சாதிச்சான்றிதழ் அசல் மற்றும் நகள் ஆதார் அட்டை அசல் மற்றும் நகல் ,வங்கிக் கணக்குப் புத்தகம், பாஸ்பேட் சைஸ் போட்டா -4, வருமான சான்றிதழ், எடுத்து வர வேண்டும்.
மாணவர் சேர்க்கைக் கட்டணம் கலை மற்றும் வணிகவியல் பாடப்பிரிவுகள் ரூ 3090/- அறிவியில் பாடப்பிரிவுகள் ரூ 3110/-பிகாம் (சிஏ), கம்யூட்டர் சைன்ஸ், பிசிஏ பாடப் பிரிவுகளுக்கு ரூ 2210/- சேர்க்கை கட்டணமாக எடுத்து வர வேண்டும்.சேர்க்கைக்காக வரும் மாணவர்கள் கண்டிப்பாகப் பெற்றோருடன் கலந்தாய்வில் வாந்துகொள்ள வேண்டும். அடுத்த பட்டக் கயந்தாய்பின் அட்டவனை பின்னர் அறிவிக்கப்படும்.
மாணவர் சேர்க்கை விவரங்கள் www.gacdpl.ac.in என்ற இணையதளத்தில் நாள்தோலும் கலந்தாய்வுக்கு பின்னர் காலியிட விவரங்கள்பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு செய்தி குறிப்பில் கல்லூரியின் முதல்வர் கண்ணன் தெரிவித்துள்ளார்.

