மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: தேர்தல் வாக்குறுதிபடி புதிய மாவட்டங்களை தமிழக அரசு அமைக்கவேண்டும்: பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > அரசியல் > தேர்தல் வாக்குறுதிபடி புதிய மாவட்டங்களை தமிழக அரசு அமைக்கவேண்டும்: பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் 
அரசியல்

தேர்தல் வாக்குறுதிபடி புதிய மாவட்டங்களை தமிழக அரசு அமைக்கவேண்டும்: பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் 

Social Vision
Last updated: 2025/06/30 at 7:20 AM
Social Vision
Share
2 Min Read
SHARE

தேர்தல் வாக்குறுதிபடி புதிய மாவட்டங்களை தமிழக அரசு அமைக்கவேண்டும்: பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் 

2027-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டமான வீடுகள் பட்டியல் தயாரிப்பு 2026-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒன்றாம் தேதி தொடங்கவுள்ள நிலையில், காவல் நிலையங்கள், வட்டங்கள் தொடங்கி மாவட்டங்கள் வரையிலான எல்லைகளை திசம்பர் 31-ஆம் தேதிக்குள் இறுதி செய்ய வேண்டும் என்று மாநில அரசுகளை இந்தியமக்கள்தொகைகணக்கெடுப்புக்கான தலைமைப்பதிவாளர் அலுவலகம் கேட்டுக்கொண்டுள்ளது. அதாவது, புதிய மாவட்டங்கள், வட்டங்களைஅமைப்பதாக இருந்தால், நடப்பாண்டிற்குள் செய்து முடிக்க வேண்டும் என்பது தான் அதன் பொருள் ஆகும்.

2025-ஆம் ஆண்டு திசம்பர் மாதத்திற்குள் புதிய மாவட்டங்களும், வட்டங்களும் அமைக்கப்படவில்லை என்றால், மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகள் முழுமையான முடிந்து, முடிவுகள் அறிவிக்கப்படும் வரை  அவற்றை செய்ய முடியாது. அதன்படி, நடப்பு திமுக ஆட்சியில் புதிய மாவட்டங்களை அமைப்பதற்கு இது தான் கடைசி வாய்ப்பு ஆகும்.

2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின் போது, திமுக ஆட்சிக்கு வந்தால் புதிய மாவட்டங்கள் அமைக்கப்படும் (வாக்குறுதி எண் 380) என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. தேர்தல் பரப்புரையின் போது தஞ்சாவூர் மாவட்டத்தைப் பிரித்து கும்பகோணம் மாவட்டம் அமைக்கப்படும்; திண்டுக்கல் மாவட்டத்தைத் பிரித்து பழனி மாவட்டம் அமைக்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் உறுதியளித்திருந்தார். கடலூர், சேலம், திருவண்ணாமலை, விழுப்புரம், திருவள்ளூர் உள்ளிட்ட பல மாவட்டங்களைப் பிரித்து புதிய மாவட்டங்கள் அமைக்கப்படும் என்றும் அவர் வாக்குறுதி அளித்திருந்தார்.  ஆனால், ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டுகள் ஆகியும்  இதுவரை ஒரே ஒரு புதியமாவட்டம்கூட ஏற்படுத்தப்படவில்லை.

இதையும் படிங்க

புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சியின் (தமிழ்நாடு) தருமபுரி மாவட்ட மாநாட்டில் மாவட்ட செயலாளராக எம்.ரமேஷ் தேர்வு 
பேரறிஞர் அண்ணா நினைவு நாளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைதிப் பேரணி 
பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்தில் முஸ்லிம் முன்னேற்றக் கழகம், மனித நேய மக்கள் கட்சியில் ஏராளமானோர் இணைந்தனர். 

தேர்தலின் போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் 90% வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசு, புதிய மாவட்டங்கள் தொடர்பான வாக்குறுதியையும்  இன்னும் நிறைவேற்றவில்லை. புதிய மாவட்டங்களை அமைப்பதற்கு செலவுகள் எதுவும் கிடையாது. புதிய பணியிடங்கள் ஏற்படுத்தப்பட்டாலும் கூட, அவை இருக்கும் பணியாளர்களைக் கொண்டு தான் நிரப்பப்படவுள்ளன.  ஆனாலும், புதிய மாவட்டங்களை உருவாக்குவதற்கு என்ன தடை? என்று தெரியவில்லை.

பெரிய மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் தங்களுக்கான அரசின் சேவைகளை பெற நீண்ட தூரம் அலைய வேண்டியிருக்கிறது. அதற்கு முடிவு கட்ட பெரிய மாவட்டங்களை பிரித்து புதிய மாவட்டங்களை அமைப்பது மட்டும் தான் தீர்வு. எனவே,  சட்டப்பேரவைத் தேர்தலின் போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் வரும் திசம்பர் மாதத்திற்குள் புதிய மாவட்டங்களை  அமைத்து முடிக்க வேண்டும்;  அதற்கான அறிவிப்பை உடனடியாக வெளியிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். என தனது எக்ஸ்தள பக்கத்தில் பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் எம்பி குறிப்பிட்டுள்ளார்.

TAGGED: தேர்தல் வாக்குறுதிபடி புதிய மாவட்டங்களை தமிழக அரசு அமைக்கவேண்டும்: பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ்
Social Vision June 30, 2025 June 30, 2025
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
அகில இந்திய வேலைநிறுத்த ஆயித்தமாநாடு #socialvisiontv
#shorts #shortvideo #shortfeed #socialvisiontv
#shortvideo #shortfeed #shorts #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #breakingnews #socialvisiontv
Social Vision TV
#shortvideo #shortfeed #shorts #socialvisiontv #dmk
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

பிரபஞ்சன் சிறுகதைகள் (இரண்டு தொகுதிகள்)
புத்தகம் பேசினால்

நான் நிறைவோடு இருக்கிறேன் – பிரபஞ்சன் சிறுகதைகள் (இரண்டு தொகுதிகள்)

April 29, 2024
ரெயில்வே டிக்கெட் பரிசோதகர்
சாதனையாளர்கள்

ரயில்வே துறையில் பெண் டிக்கெட் பரிசோதகராக தமிழ்நாட்டில் முதல் திருநங்கை நியமனம்

February 9, 2024
குற்றம்

நகை சேமிப்பு திட்டத்தில் ரூ 100 கோடி மோசடி செய்த நகைக்கடை உரிமையாளர் கைது செய்து சிறையில் அடைப்பு 

May 29, 2024
அரசு நல திட்டம்

கெட்டுஅள்ளி கிராமத்தில் ரூ 6.50 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி மையம் திறப்பு

November 14, 2024
கல்வி & வேலைவாய்ப்பு

தருமபுரியில் பிப்-15 ல் கல்வி கடன் வழிகாட்டுதல் விழா: மாணவர்கள் கல்வி கடனுக்கு விண்ணப்பிக்கலாம்.

February 12, 2024
அரசியல்

இறந்த அஜித்குமாரின் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் தெரிவித்த தொல்.திருமாவளவன் எம்பி 

July 2, 2025

மேலும் படிங்க

அரசியல்

புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சியின் (தமிழ்நாடு) தருமபுரி மாவட்ட மாநாட்டில் மாவட்ட செயலாளராக எம்.ரமேஷ் தேர்வு 

February 5, 2026
அரசியல்

பேரறிஞர் அண்ணா நினைவு நாளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைதிப் பேரணி 

February 3, 2026
அரசியல்

பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்தில் முஸ்லிம் முன்னேற்றக் கழகம், மனித நேய மக்கள் கட்சியில் ஏராளமானோர் இணைந்தனர். 

December 23, 2025
அரசியல்

டாக்டர் அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியினர் அவரதுசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

December 6, 2025

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?