சென்னையில் ரூ 207 கோடியே 90 இலட்சததில் 120 மின்சார பேருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடக்கிவைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் (30.06.2025) அன்று போக்குவரத்துத் துறை சார்பில் சென்னை, வியாசர்பாடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சென்னையில் சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்கும் நோக்கில், தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் முதற்கட்டமாக 207 கோடியே 90 இலட்சம் ரூபாய் மதிப்பிலான 120 புதிய தாழ்தள மின்சாரப் பேருந்துகள் இயக்கத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.பின்னர் ஓட்டுநர் ,நடத்துனரிடம் கலந்துரையாடினார்.

இந்நிகழ்ச்சியில், போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர்,இந்துசமயஅறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆர்.டி.சேகர், ஆர். மூர்த்தி, ஜே.ஜே. எபினேசர், தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், போக்குவரத்து துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.பணீந்திர ரெட்டி, மாநகர் போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் த.பிரபு சங்கர், அசோக் லேலண்ட் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அலுவலர் ஷேனு அகர்வால், மாநகர் போக்குவரத்து கழக இணை மேலாண் இயக்குனர் தசெ. நடராஜன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.

