மதிமுக மாநில நிர்வாக குழு கூட்டததில் நிறைவேற்றப்பட்ட 6 முக்கிய தீர்மானங்கள்
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் நிர்வாகக் குழுக் கூட்டம் சென்னை தாயகத்தில் (29.06.2025) கழக அவைத் தலைவர் ஆடிட்டர் ஆ. அர்ஜுன் ராஜ் அவர்கள் தலைமையில் நடந்தது.
கழகப் பொதுச் செயலாளர் தலைவர் வைகோ திருச்சியில் செப்டம்பர் 15 இல் நடைபெற உள்ள பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவது குறித்தும், சட்டப்பேரவை தேர்தலில் கழகத்தின் உறுதியான நிலைப்பாடு குறித்து பேசினார்.

கழகப் பொதுக்குழுவில் அறிவிக்கப் பட்டவாறு, ஜூலை 1ம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை மண்டல வாரியான கழக செயல் வீரர்கள் கூட்டங்களை எவ்வாறு திட்டமிட்டு நடத்துவது? மாநாட்டுக்கான ஏற்பாடுகளை ஒவ்வொரு மாவட்ட கழகமும் எப்படி மேற்கொள்வது?
மாநில மாநாட்டிற்கு கழகத் தொண்டர்களையும் பொது மக்களையும் அணி திரளச் செய்ய மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து துரைவைகோ எம்பி பேசினார்.

கழகப் பொருளாளர் மு.செந்திலதிபன், துணைப் பொதுச் செயலாளர்கள் மல்லை சத்யா, ஏ கே மணி, ஆடுதுறை முருகன்,
தி மு ராஜேந்திரன், டாக்டர் ரொகையா மற்றும் மண்டல செயல்வீரர்கள் கூட்டங்களை நடத்த உள்ள மாவட்டச் செயலாளர்கள் கருத்துகளை முன் வைத்து பேசினர்.இக்கூட்டத்தில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

