மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு இறுதிகட்டப் பணிகளை ஆய்வு செய்த கனிமொழி கருணாநிதி எம்.பி
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > ஆன்மிகம் > திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு இறுதிகட்டப் பணிகளை ஆய்வு செய்த கனிமொழி கருணாநிதி எம்.பி
ஆன்மிகம்

திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு இறுதிகட்டப் பணிகளை ஆய்வு செய்த கனிமொழி கருணாநிதி எம்.பி

Social Vision
Last updated: 2025/06/28 at 10:04 AM
Social Vision
Share
2 Min Read
SHARE

திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு இறுதிகட்டப் பணிகளை ஆய்வு செய்த கனிமொழி கருணாநிதி எம்.பி

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் குடமுழுக்கு நன்னீராட்டு விழா வருகின்ற ஜூலை 7 ஆம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு திருக்கோயில் வளாகத்தில் நடைபெற்று வரும் திருப்பணிகள், யாகசாலை அமைக்கும் பணிகள், பக்தர்கள் பாதுகாப்பான முறையில் சுவாமி தரிசனம் செய்வதற்கு ஏதுவாக தடுப்பு அமைக்கும் பணிகள், பக்தர்கள் வாகன நிறுத்துமிடம் மற்றும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் வாகனம் நிறுத்தும் இடம் உள்ளிட்ட முன்னேற்பாடுகள் பணிகளை பாராளுமன்ற திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி, மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த குடமுழுக்கு விழாவிற்கான யாகசாலை பூஜைகள் ஜூலை 1ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற உள்ளது. திருக்குடமுழுக்கு நன்னீராட்டு விழாவில் சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுக்கப்படுகிறது. எனவே, திருக்குடமுழுக்கு நன்னீராட்டு விழா காலங்களில் பக்தர்களின் வசதிக்காக பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க

தருமபுரிகுமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணியசாமி கோவிலில் தெப்ப உற்சவம்:ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
தஞ்சாவூர் மாமன்னர் இராசராச சோழன் 1040 சதய விழா துவங்கியது
பாலக்கோட்டில் காவிரி நதிநீர் விழிப்புணர்வு ரதயாத்திரை

இந்த திருப்பணிகளை விரைந்து முடித்திட கனிமொழி கருணாநிதி எம்பி அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், சேகர் பாபு அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார். மேலும், திருக்கோயில் வளாகம் மற்றும் கடற்கரைப் பகுதிகளில் பக்தர்கள் பாதுகாப்பாக நின்று சுவாமி தரிசனம் செய்வதற்கு ஏதுவாக தடுப்பு அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதையும், குடிநீர் வசதிகள், சுகாதார வசதிகள், அகன்ற எல்இடி திரைகள் உள்ளிட்ட வசதிகள் மேற்கொள்ளப்படவுள்ள இடத்தினையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, ஆலோசனை வழங்கினார்கள்.

மேலும், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் இதர பணிகள் உள்ளிட்டவற்றை ஒருங்கிணைந்து மேற்கொள்வதற்காக 100க்கும் மேற்பட்ட அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பக்தர்களுக்கு தேவையான இடங்களில் அன்னதானம் வழங்குவது தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் கேட்டறிந்தார்கள். இதைத் தொடர்ந்து, அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டமும் நடைபெற்றது.

ஆய்வின் போது, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், திருச்செந்தூர் நகராட்சி தலைவி சிவானந்தி, திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் சுகுமாறன், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் தர்க்கார் அருள்முருகன், இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

TAGGED: திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு இறுதிகட்டப் பணிகளை ஆய்வு செய்த கனிமொழி கருணாநிதி எம்.பி
Social Vision June 28, 2025 June 28, 2025
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
அகில இந்திய வேலைநிறுத்த ஆயித்தமாநாடு #socialvisiontv
#shorts #shortvideo #shortfeed #socialvisiontv
#shortvideo #shortfeed #shorts #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #breakingnews #socialvisiontv
Social Vision TV
#shortvideo #shortfeed #shorts #socialvisiontv #dmk
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

தமிழ்நாடு

பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலையில்முன்னாள் மாணவர்கள், ஊழியர்கள், சந்திப்பு விழா

December 29, 2024
தொல்லியல்

இண்டூரில் பெரும்கற்கால சின்னங்களை மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி  பார்வையிட்டு ஆய்வு 

July 2, 2024
அரசு நல திட்டம்

சென்னையில் ரூ 207 கோடியே 90 இலட்சததில் 120 மின்சார பேருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடக்கிவைத்தார்.

June 30, 2025
மாவட்டங்கள்

மூன்று தலைமுறையாக வீடுக்கட்டி குயிருப்போக்கு மனைபட்டா கேட்டு ஆட்சியரிடம் மனு

October 27, 2025
தமிழ்நாடு

ஒகேனக்கல் ஆடிப்பெருக்கு விழாவில் 401 பயனாளிகளுக்கு ரூ 8 கோடியே 13 இலட்சத்து 52 ஆயிரம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வழங்கினார்.

August 2, 2024
போக்சோ இணையதள சேவை
குழந்தைகள் உலகம்தமிழ்நாடு

பெண்குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய போக்சோ இணையதள சேவை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடக்கிவைத்தார்.

June 18, 2024

மேலும் படிங்க

ஆன்மிகம்

தருமபுரிகுமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணியசாமி கோவிலில் தெப்ப உற்சவம்:ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

February 6, 2026
ஆன்மிகம்சுற்றுலா

தஞ்சாவூர் மாமன்னர் இராசராச சோழன் 1040 சதய விழா துவங்கியது

October 31, 2025
ஆன்மிகம்

பாலக்கோட்டில் காவிரி நதிநீர் விழிப்புணர்வு ரதயாத்திரை

October 29, 2025
ஆன்மிகம்

தருமபுரிகுமாரசாமிப்பேட்டைசிவசுப்பிரமணிய சாமி கோவில் கந்தசஷ்டி சூரசம்கார விழா:ஏராளமான பக்தர்கள் தரிசனம்

October 27, 2025

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?