வாழைத்தோட்டம் கிராமத்தில் சேவலை கவ்வி செல்லும் சிறுத்தை – சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு சுற்று வட்டார பகுதிகளான பெல்ரம்பட்டி, பஞ்சப்பள்ளி, மாரண்டஅள்ளி ஆகிய வனப்பகுதிகளில் இருந்து யாணை, காட்டுபண்றி, மான், சிறுத்தை போன்ற வன விலங்குகள் உணவு தேடி அவ்வப்போது ஊருக்குள் புகுந்து விவசாய பயிர்கள் மற்றும் கால்நடைகளை சேதப்படுத்தி வருகின்றன.

இந்நிலையில், இன்று விடியற்காலை பாலக்கோடு அடுத்த வாழைத்தோட்டம் பகுதியில் உள்ள விநாயகம் என்பவரின் வீட்டின் முன்பு வந்த சிறுத்தை விநாயகம் வளர்த்து வரும் சேவல்களில் ஒன்றை பிடித்து கவ்வி சென்றது.
சத்தம் கேட்கவே வெளியில் வந்து பார்த்தபோது,சிறுத்தை சேவலை கவ்வி சென்றது கண்டு அதிர்ச்சி அடைந்தவர்கள் சி.சி.டி.வி கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்த போது சுமார் 3 வயது மதிக்கதக்க பெண் சிறுத்தை ஒன்று இவரது வீட்டின் முன்பு உணவு தேடி அலைவதும், பின்னர் மெதுவாக வீட்டின் முற்றத்தின் மேல் பகுதியில் அமர்ந்திருந்த சேவல்களில் ஒன்றை பிடித்து கவ்வி செல்வதும் தெரிய வந்தது.

இவரது வீட்டில் கடந்த ஆண்டு ஒரு நாயை கவ்வி சென்றது, 3-மாதத்திற்க்கு முன்னர் ஒரு கோழி கவ்வி சென்றது, தற்போது சேவலை வேட்டையாடிய சென்றுள்ளது.இச்சம்பவம் விநாயகம் குடும்பத்ததினரிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாலக்கோடு வனத்துறையினர்
குடியிருப்பு பகுதிக்குள் வரும் சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணித்து அதனை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

