ஒகேனக்கல் காவிரிஆற்றில் நீர்வரத்துஅதிகரிப்பு: உரியபாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் ஆட்சியர் ரெ. சதீஷ் தகவல்
கர்நாடக அணைகளிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், தருமபுரி, ஒகேனக்கல் காவிரி ஆற்றில் ஏற்பட்டுள்ள தண்ணீர் வரத்து அதிகரிப்பினை மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ், நேரில் கள ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால், உரிய பாதுகாப்பு பணிகள் மாவட்ட நிர்வாகத்தின்சார்பில்மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும்,ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்கவும் மற்றும் பரிசல் இயக்கவும் மறு உத்தரவு வரும் வரை தடை விதிக்கப்பட்டுள்ளது எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, பென்னாகரம் வட்டம், ஒகேனக்கல்லில் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் சுற்றுச்சூழல் மற்றும் நெகிழிப்பயன்பாடு தடை குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியான ”சுற்றுச்சூழலைப் பாதுகாக்க என்னுடைய தினசரி வாழ்க்கையில் சாத்தியமான அனைத்து மாற்றங்களையும் செய்வேன் என்றும், எனது குடும்பம், நண்பர்கள் மற்றும் பலருக்கும் சுற்றுச்சூழலுக்கு உகந்த பழக்கவழக்கங்களின் முக்கியத்துவம் குறித்து தொடர்ந்து ஊக்குவிப்பேன் என்றும் உறுதி அளிக்கிறேன்” என்ற உறுதிமொழியினை வாசிக்க அரசுத்துறை அலுவலர்கள், பொதுமக்கள் பின்தொடர்ந்து வாசித்து ஏற்றுகொண்டார்கள்.

இந்நிகழ்வுகளின்போது, பென்னாகரம் வட்டாட்சியர் பிரசன்னா மூர்த்தி, பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலர் லோகநாதன், செய்தி மக்கள் தொடர்பு வெ.லோகநாதன், மாவட்ட சுற்றுலா அலுவலர் (பொறுப்பு) பா.கதிரேசன் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உள்ளனர்.

