முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மாற்றுத்திறனாளிகள் ஒருங்கிணைப்புக்குழு பாராட்டு
மாற்றுத்திறனாளிகள் சமூகம் ‘உள்ளாட்சி அமைப்புகளில் நியமன முறையில் பிரதிநிதித்துவம்’ வழங்க சட்டமன்றத்தில் சட்ட திருத்தம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது.மாற்றுத்திறனாளிகளின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஜூன் 21ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ‘மாற்றுத்திறனாளிகள் ஒருங்கிணைப்பு குழு’ சார்பில் மாபெரும் நன்றி பாராட்டு விழா நடைபெற்றது. நன்றி பாராட்டு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார்.

