அரூர் பெரிய ஏரியை ஆழப்படுத்தி படகு இல்லம் பூங்கா அமைக்க மனிதநேய ஜனநாயக கட்சி வலியுறுத்தல்
மனிதநேய ஜனநாயக கட்சியின் பத்தாம் ஆண்டு துவக்க விழா மற்றும் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி அக்கட்சியில் இணையும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் எம்.இம்ரான் தலைமை வகித்தார் மாவட்ட அவைத்தலைவர் எஸ்.ஹபீசுல்லா அனைவரையும் வரவேற்றார். மாவட்ட துணை செயலாளர்கள் எஸ்.நயமத்துல்லா நாகராஜ், வர்த்தகர் அணி குதுரத் இளைஞர் அணி நஜாப்பாஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக
மனித நேய ஜனநாயக கட்சியின், மாநில துணை செயலாளர்எ.ஜே.எஸ்.தாஜுதீன், மாநில மகளிர் அணி பொருளாளர் குலாப்ஜான் ஆகியோர் கலந்து கொண்டு கட்சியில் இணைந்த அனைவருக்கும் துண்டுகள் அணிவித்து வரவேற்றனர்.பின்னர் பெஹல்காம் தீவிரவாத தாக்குதலில் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள வக்ஃபு திருத்த சட்டமசோதாவை திரும்ப பெறவேண்டும். தென்பெண்ணையாறு உபரிநீரை நீரேற்றம் செய்து அரூர் தீர்த்தமலை பகுதிகளில் உள்ள ஏரிகளை நிரப்ப வேண்டும். பருவமழை தொடங்க உள்ள நிலையில் ஏரிகளில் உள்ள கருவேல மரங்களை அகற்றி நீர்வழிப்பாதை ஆக்கிரமிப்புகளை அகற்றிடவும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அரூர் பெரிய ஏரிப்பகுதியில் உள்ள அசுத்தங்களை தூய்மைப்படுத்தி ஏரியை ஆழப்படுத்தி படகு இல்லம் அமைக்க வேண்டும். பொழுதுபோக்கும் வகையில் பூங்கா மற்றும் சிறுவர்களுக்கான விளையாட்டு சாதனங்கள் அமைத்திட வேண்டும். தீர்த்தமலையை தனி ஊராட்சி ஒன்றியமாக அறிவிக்க வேண்டும் மனிதநேய ஜனநாயக கட்சியை நகர ஒன்றியம் மாவட்ட வாரியாக அதிகளவில் உறுப்பினர்களை சேர்க்களை வேண்டும் நகர பகுதிகளில் கிளைகள் ஏற்படுத்தி கட்சியை பலபடுத்தவேண்டும். உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஒன்றிய நகர நிர்வாகிகள் ஏ.அகமது. ஏ.ஜானி. பையாஷ். உமர்.அஜிசுல்லா. தஸ்தகீர்.பர்வேஷ்முஷரப்.ஆட்டோரகு.ரியாஷ். ஆகியோர் செய்திருந்தனர் இறுதியாக நகர செயலாளர் எஸ்.கரீம் நன்றி கூறினார்.

