பாலக்கோடு அருகே ஏரியில் மூழ்கி போர்வெல் தொழிலாளி உயிரிழப்பு
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த தொம்பகாரம்பட்டியை கிராமத்தை சேர்ந்த விவசாயி கந்தசாமியின் மகன் விக்னேஷ் (28),மற்றும் வெள்ளக்கல் பகுதியைச் சேர்ந்த காளியப்பன் மகன் தர்மன் (35) ஆகிய இருவரும் தனியார் போர்வெல் அமைக்கும் வாகனத்தில் வேலை செய்து வருகின்றனர், திங்களன்று தமிழ் புத்தாண்டை முன்னிட்டு விடுமுறைநாள் என்பதால் பாலக்கோடு அருகே சோமனஅள்ளி ஏரியில் மது அருந்திவிட்டு குளிக்கச் சென்றுள்ளனர், அப்போது அக்கறையிலிருந்து இக்கறையை தொட முயற்சிப்பதாக கூறி விக்னேஷ் தண்ணீரில் நீந்தி செல்லும்போது சுமார் 50 அடி ஆழமுள்ள தண்ணீரில் எதிர்பாராத விதமாக ஏரியின் நடுவே மூழ்கியுள்ளார். இதனைக் கண்டு தர்மன் அதிர்ச்சி அடைந்து உள்ளார்.

இந்நிலையில் ஏரியில் குளிக்க சென்ற இளைஞர் மது போதையில் ஏரியில் மூழ்கிய சம்பவம் குறித்து அப்பகுதி பொதுமக்கள் , பாலக்கோடு போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலின் பேரில் அங்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார், ஏரியில் இளைஞரை தேடும் பணியில் நேற்று மாலை முதல் ஈடுபட்டனர். ரப்பர் படகு மற்றும் அதிநவீன கேமராக்களை கொண்டு 24 மணி நேரம் கழித்து ஏரியில் தீவிரமாக தேடி விக்னேஷின் உடலை இன்று கண்டு பிடித்தனர்,மேலும் ஏரியிலிருந்து விக்னேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பாலக்கோடு காவல்துறையினர் அனுப்பி வைத்தனர்.இச்சம்பவம் குறித்து பாலக்கோடு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

