தருமபுரியில் பீம் ஆர்மி ஆசாத் சமாஜ் (கான்சிராம்) கட்சியின் சார்பில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா
சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தருமபுரி அரசு மருத்துவமனை அருகில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு பீம் ஆர்மி ஆசாத் சமாஜ் (கான்சிராம்) கட்சியின் சார்பில் மாலை அணிவிப்பு நிகழ்சசி நடைபெற்றது.

பீம் ஆர்மி ஆசாத் சமாஜ் (கான்சிராம்) கட்சியின் சார்பில் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 134வது பிறந்த நாளை முன்னிட்டு அவரின் திருஉருவ சிலைக்கு மாநில தலைவர் எம். சந்திரசேகர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் ஜெயசீலன், மாவட்ட நிர்வாகிகள் முத்தமிழன்,இரா.முத்து, பரிதி, அறிவழகன், ஆனந்த் ஆகியோர் பங்கேற்றனர்.
.

