மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: அன்னசாகரம் சிவசுப்பிரமணியசாமி கோவில் பங்குனிஉத்திரதேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > ஆன்மிகம் > அன்னசாகரம் சிவசுப்பிரமணியசாமி கோவில் பங்குனிஉத்திரதேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
ஆன்மிகம்

அன்னசாகரம் சிவசுப்பிரமணியசாமி கோவில் பங்குனிஉத்திரதேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Social Vision
Last updated: 2025/04/05 at 9:40 AM
Social Vision
Share
2 Min Read
SHARE

அன்னசாகரம் சிவசுப்பிரமணியசாமி கோவில் பங்குனிஉத்திரதேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

தருமபுரி அன்னசாகரம் சிவசுப்பிரமணியசாமி கோவில்பங்குனி உத்திரதேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பங்குனி உத்திர திருவிழா
தருமபுரி அன்னசாகரம் சிவசுப்பிரமணிய சாமி கோவில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது. பின்னர் கணபதி பூஜையுடன் யாகசாலை பூஜைகள் மற்றும் வாஸ்து பூஜைகள் நடைபெற்றது. பின்னர் யாகசாலையில் இருந்து புனித நீர் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கொடிமரத்துக்கு ஊற்றி சிறப்பு வழிபாடுகள் மற்றும் மகா தீபாரதனை நடைபெற்றது. தொடர்ந்து இரவு ஆட்டுக்கடா வாகனத்தில் சாமி உற்சவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) நரி வாகன உற்சவமும், நாளை (திங்கட்கிழமை ) பூத வாகன உற்சவமும், நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) நாக வாகன உற்சவமும் நடக்கிறது. வருகிற 9-ம் தேதி காலை பால்குட ஊர்வலமும், இரவு சாமி திருக்கல்யாணம், தோரணவாயில் ஊஞ்சல் சேவை மற்றும் மயில்வாகனத்தில் சாமி உற்சவமும் நடக்கிறது. வருகிற 10-ம் தேதி விநாயகர் தேரோட்டமும், யானை வாகன உற்சவமும் நடக்கிறது.

இதையும் படிங்க

தருமபுரிகுமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணியசாமி கோவிலில் தெப்ப உற்சவம்:ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
தஞ்சாவூர் மாமன்னர் இராசராச சோழன் 1040 சதய விழா துவங்கியது
பாலக்கோட்டில் காவிரி நதிநீர் விழிப்புணர்வு ரதயாத்திரை

தேரோட்டம்

விழாவில் முக்கிய நாளான வருகிற 11-ம் தேதி பங்குனி உத்திர தேரோட்டம் நடைபெறுகிறது. அன்று காலை சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடுகள் நடக்கிறது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் சாமி மகாராதத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். தொடர்ந்து பெண்கள் மட்டும் நிலைப் பெயர்க்கும் தேரோட்டமும், மாலை பொதுமக்கள் வடம் பிடிக்கும் தேரோட்டமும் நடக்கிறது. விழாவையொட்டி கோவில் வளாகம் மற்றும் செங்குந்தர் திருமண மண்டபத்தில் அன்னதானம் வழங்கும் விழா நடக்கிறது.
வருகிற 12-ம் தேதி வேடர்பறி உற்சவமும், 13-ம் தேதி கொடி இறக்கம், மஞ்சள் நீராட்டு விழா மற்றும் பல்லக்கு உற்சவம் நடக்கிறது. 14-ம் தேதி சயன உற்சவமும், 15-ம் தேதி விடையாற்றி உற்சவமும் நடக்கிறது. விழாவையொட்டி தினமும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறையினர், விழா குழுவினர், செங்குந்தர் சமூகத்தினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகிறார்கள்.

TAGGED: அன்னசாகரம் சிவசுப்பிரமணியசாமி கோவில் பங்குனிஉத்திரதேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
Social Vision April 5, 2025 April 5, 2025
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
அகில இந்திய வேலைநிறுத்த ஆயித்தமாநாடு #socialvisiontv
#shorts #shortvideo #shortfeed #socialvisiontv
#shortvideo #shortfeed #shorts #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #breakingnews #socialvisiontv
Social Vision TV
#shortvideo #shortfeed #shorts #socialvisiontv #dmk
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

கல்வி & வேலைவாய்ப்பு

தருமபுரி ஜூலை – 13 ல் நடைபெற உள்ள குரூப் -1 தேர்வில் 8314 தேர்வர்கள் எழுத உள்ளனர்.

July 11, 2024
குடிநீர் கேட்டு மனு
மாவட்டங்கள்

தண்டேகுப்பம் கிராமத்திற்கு குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் மனு கொடுக்க வந்த மக்கள்

February 12, 2024
மாவட்டங்கள்

மின்வாரியத்தில் , அரசாணை 100 ஐ அரசு உத்திரவாதத்துடன்  முறைப்படுத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.

February 13, 2024
தமிழ்நாடு

தருமபுரி புதியதாக பொறுப்பேற்ற மாவட்ட ஆட்சியர் ரெ. சதிஸை சந்தித்து வாழ்த்து தெரிவித்த டியுஜே நிர்வாகிகள்

February 5, 2025
parliament
இந்தியா

நாடாளுமன்ற உறுப்பினர்கள் (MP) -க்களின் சம்பளம் மற்றும் சலுகைகள்இவ்வளவா!

June 7, 2024
புத்தகம் பேசினால்

தருமபுரி தம்பி பதிப்பகத்தின் நூல் வெளியீட்டு விழா.

February 18, 2024

மேலும் படிங்க

ஆன்மிகம்

தருமபுரிகுமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணியசாமி கோவிலில் தெப்ப உற்சவம்:ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

February 6, 2026
ஆன்மிகம்சுற்றுலா

தஞ்சாவூர் மாமன்னர் இராசராச சோழன் 1040 சதய விழா துவங்கியது

October 31, 2025
ஆன்மிகம்

பாலக்கோட்டில் காவிரி நதிநீர் விழிப்புணர்வு ரதயாத்திரை

October 29, 2025
ஆன்மிகம்

தருமபுரிகுமாரசாமிப்பேட்டைசிவசுப்பிரமணிய சாமி கோவில் கந்தசஷ்டி சூரசம்கார விழா:ஏராளமான பக்தர்கள் தரிசனம்

October 27, 2025

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?