நூறுநாள் திட்ட தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய நிதியை ஒன்றிய அரசு வழங்க கோரி பெருந்திரள் ஆர்ப்பாட்டம்
நூறுநாள் வேலை திட்ட தொழிலாளர்களுக்கு ஒன்றிய அரசு, தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிதியை உடனே வழங்க கோரி தருமபுரி மாவட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்ட தொழிலாளர் சங்கத்தின் சார்பில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாட்டில் கடந்த 5 மாதங்களில் நூறுநாள் பணிசெய்த கிராமப்புற தொழிலாளர்களுக்கு ரூ2,985/- கோடி ரூபாய் ஒன்றிய அரசு வழங்காமல் உள்ளது இந்த தொகையை உடனே வழங்க வேண்டும்,ஒன்றிய நிதி நிலை அறிக்கையில் வேலை அட்டைபெற்ற அனைவருக்கும் வேலை வழங்கும் வகையில் ரூ 4.5 லட்சம் கோடி நிதி ஒதுக்க வேண்டும், ஆண்டுக்கு 200 நாள் வேலை தின சம்பளம் ரூ 700/- வழங்க வேண்டும்,
வேலை வேண்டி விண்ணப்பத்தினை ஊராட்சி தனி பதிவேட்டில் பதிவு செய்து இதன் அடிப்படையில் வேலை வழங்க வேண்டும்,நூறு நாள் முடித்த பணிதள பொறுப்பாளர்களை மாற்ற வேண்டும்,கட்டுமான பணிகளுக்கு ஒதுக்கும் நிதியை 40:60 என்ற அடிப்படையில் திறனற்ற கிராமப்புற தொழிலாளர்களுக்கு 40 சதவீதம் பணியை வழங்க வேண்டும். இதனை தனி பணிதள பொறுப்ளாளர் நியமனம் செய்து கண்காணிக்க வேண்டும்,மேலும் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியறுத்தி பெரும்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பெருந்திரள் ஆர்ப்பாட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளரும், இலளிகம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருமான ஜெ. பிரதாபன் தலைமை வகித்தார். இதில் சங்க ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர்கள் ஜி.மாதையன், அலமேலு எத்துராஜ், பச்சாகவுண்டர், ராஜகோபால்,கே .லட்சுமணன், வி.செல்வம், ஜி சம்பத், மற்றும் குக்கிராம சங்கஒருங்கிணைப்பாளர்கள்மணியம்மாள்,பாப்பம்மாள்,ராதிகாவனிதா,பெருமாக்கள், .கோவிந்தசாமி மற்றும் திரளான கிராமபுற தொழிலாளர்கள் கலந்துக் கொண்டனர். இறுதியாக கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாவட்டஆட்சியரின்நேர்முகஉதவியாளர் (பொது) அவர்களிடம் சங்க தலைவர்கள் வழங்கினர்.

