பாலக்கோடு பர்னிச்சர் கடையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு தக்காளி மார்க்கெட் அருகே கார்த்திக் என்பவருக்கு சொந்தமான பர்னிச்சர் கடைஇயங்கிவருகின்றது.வழக்கம்போல் விற்பனைக்காக பர்னிச்சர் கடையை இன்றுதிறந்துவைத்துள்ளனர், அப்போது கட்டில் மெத்தை உள்ளிட்ட பொருட்கள் வைத்துள்ள பகுதியில் இருந்து தீ பற்றி அடர்ந்த புகை வருவதைக் கண்டு கடையின் உரிமையாளர் கார்த்திக் அதிர்ச்சி அடைந்தார்.உடனடியாக, அக்கம் பக்கத்தினர் சேர்ந்து, தீயை அணைக்க முயன்றனர்,ஆனால் பர்னிச்சர் கடை முழுவதும் சற்று நேரத்தில் தீ பரவியது,
தகவலின் பெயரில் பாலக்கோடு தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வருவதற்குள், தீ முழுவதும் கொளுந்துவிட்டு எரிந்தது. கூடுதலாக தர்மபுரியில் இருந்து தீயணைப்பு வண்டி வரவழைக்கப்பட்டு தீ மற்ற இடங்களுக்கு பரவாமல் அங்கும் தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது.

கிட்டத்தட்ட 4.மணி நேர கடின முயற்சிக்கு பிறகு, தீயணைப்புவீரர்கள் தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்த கட்டில் மெத்தை, பீரோ உள்ளிட்ட சுமார் 50 லட்சம் மதிப்பிலான மர சாமான்கள் மற்றும் பொருட்கள் ஆகியவை முற்றிலுமாக எரிந்து நாசமானது.
பாலக்கோடு காவல்துறையினர், முதற்கட்ட விசாரணையில் மின்பலகையில் இருந்து ஏற்பட்ட மின் கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதா ? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பாலக்கோடு காவல் துறையினர் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த தீ விபத்தினால் 1-மணி நேரமாக மின்சார இணைப்பு இப்பகுதியில் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

