பாலக்கோடு மீன் மார்க்கெட்டில் உணவு பாதுகாப்பு துறை மற்றும் மீன் வளத் துறையினர் திடிர் ஆய்வு
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு மீன் மார்க்கெட்டில் உணவு பாதுகாப்பு துறை மற்றும் மீன் வளத் துறையினர் இணைந்து இன்று காலை திடிர் ஆய்வு மேற்கொண்டனர்.
தருமபுரி மாவட்ட ஒகேனக்கல் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் 50 கிலோ அளவிலான தரமற்ற மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டன,
அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் சதிஷ் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள மீன் மார்க்கெட்டில் ஆய்வு செய்ய உத்தரவிட்டார்,இதையடுத்து மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் மருத்துவர் பானுசுஜாதா வழிகாட்டுதலின்படி உணவு பாதுகாப்பு துறை மற்றும் மீன்வளத் துறை இனைந்து,பாலக்கோடு காரிமங்கலம் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால், மீன்வளத்துறை உதவி இயக்குநர் கோகுலரமனன் ஆகியோர் தலைமையில் பாலக்கோடு மீன் மார்க்கெட்டில் இன்று காலை திடிர் ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த மீன் வகைகளான ரூட்சந்த் எனப்படும் பாறை மீன், மீர்கால், ரோகு, மற்றும் உள்ளுர் மீன்களான ஜிலேபியா வகை மீன்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. இதில் பழைய மற்றும் கெட்டு போன மீன்கள் எதுவும் இல்லை என்பதை அதிகாரிகள் உறுதி செய்தனர்.
மேலும் மீன் விற்பனை நிலையங்களில் உள்ள கழிவுகளை உடனுக்குடன் அப்புறப்படுத்த வேண்டும் என்றும் சுற்றுபுறத்தை சுகாதாரமாக வைத்து கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தினர்இந்த ஆய்வில் மீன்வளத் துறை ஆய்வாளர் சந்தோஷ், உதவி ஆய்வாளர் திருப்பதி உள்ளிட்ட குழுவினர் ஈடுபட்டனர்.

