மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: நூறுநாள் வேலை திட்டத்தில், தமிழ்நாட்டிற்கான ரூ. 4,034 கோடி நிதியை ஒன்றிய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும்: மக்களவையில் கனிமொழி கருணாநிதி எம்.பி பேச்சு
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > Uncategorized > நூறுநாள் வேலை திட்டத்தில், தமிழ்நாட்டிற்கான ரூ. 4,034 கோடி நிதியை ஒன்றிய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும்: மக்களவையில் கனிமொழி கருணாநிதி எம்.பி பேச்சு
Uncategorized

நூறுநாள் வேலை திட்டத்தில், தமிழ்நாட்டிற்கான ரூ. 4,034 கோடி நிதியை ஒன்றிய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும்: மக்களவையில் கனிமொழி கருணாநிதி எம்.பி பேச்சு

Social Vision
Last updated: 2025/03/25 at 9:15 AM
Social Vision
Share
1 Min Read
SHARE

நூறுநாள் வேலை திட்டத்தில், தமிழ்நாட்டிற்கான ரூ. 4,034 கோடி நிதியை ஒன்றிய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும்: மக்களவையில் கனிமொழி கருணாநிதி எம்.பி பேச்சு

 மக்களவையில் பேசிய திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் செயல்படுத்தப்படத் தொடங்கியதிலிருந்து, தமிழ்நாடு வேலைவாய்ப்பு உருவாக்கம் உள்ளிட்ட பல்வேறு அளவுகோல்களில் தொடர்ந்து சிறப்பாக செயல்படும் மாநிலங்களில் ஒன்றாக உள்ளது.

தமிழ்நாட்டில், 76 லட்சம் குடும்பங்களைச் சேர்ந்த கிட்டத்தட்ட 91 லட்சம் தொழிலாளர்கள், மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு உறுதித் திட்டப் பணிகளில் தீவிரமாகப் பங்கேற்கின்றனர். இதில் 86 சதம் வேலைவாய்ப்பு பெண் தொழிலாளர்களுக்கும், கிட்டத்தட்ட 29 சதம் தொழிலாளர்கள் எஸ்சி/எஸ்டி குடும்பங்களுக்கும் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்தத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1 லட்சம் மாற்றுத்திறனாளி தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது.

இதையும் படிங்க

பொதுத் தேர்வெழுதும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் எனது நல் வாழ்த்துகள்.மநீம தலைவர் நடிகர் கமல்ஹாசன்
அகரம் விதைத்திட்டம் 5287 மாணவர்களுக்கு கல்லூரியில் படிக்கும் வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுத்திருக்கிறது. நடிகர் சூர்யா பெருமிதம் 
தமிழ்நாட்டில் தொடர்தோல்வி அடைத்த பிறகும் ஒன்றிய அரசு பாடம் கற்றுக் கொள்ளவில்லை. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தருமபுரியில் பேச்சு 

ஒன்றிய அரசு நூறு நாள் வேலை திட்ட நிதியை வழங்காததால், தமிழ்நாடு நூறுநாள் வேலைகளில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு வழங்கவேண்டிய ரூ. 2,985 கோடி சம்பளத்தொகை கடந்த 4.5 மாதங்களாக (24 மார்ச் 2025 நிலவரப்படி) நிலுவையாக உள்ளது.

மேலும், 24 மார்ச் 2025 நிலவரப்படி, ரூ.1,048 கோடி மதிப்புள்ள பொருள் செலவினப் பாக்கிகளைச் சேர்த்துக் கொண்டால், தமிழ்நாட்டிற்கு நிலுவையில் உள்ள மொத்த  நிதி ரூ.4,034 கோடியாக இருக்கும்.

இதுதொடர்பாக, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், நிலுவையில் உள்ள நூறுநாள் வேலை திட்ட ஊதியத் தொகைகளை உடனடியாக வழங்குமாறு ஏற்கனவே 13.01.2025 அன்று பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார். ஆனால், இதுவரை அந்த தொகை விடுவிக்கப்படவில்லை.

எனவே, ஒன்றிய அரசு, தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய ரூ4,034 கோடி நூறுநாள் வேலைத்திட்ட நிலுவைத் தொகையை விரைவாக விடுவிக்க வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன் என்று பேசினார்.

TAGGED: 034 கோடி நிதியை ஒன்றிய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும்: மக்களவையில் கனிமொழி கருணாநிதி எம்.பி பேச்சு, தமிழ்நாட்டிற்கான ரூ. 4, நூறுநாள் வேலை திட்டத்தில்
Social Vision March 25, 2025 March 25, 2025
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
அகில இந்திய வேலைநிறுத்த ஆயித்தமாநாடு #socialvisiontv
#shorts #shortvideo #shortfeed #socialvisiontv
#shortvideo #shortfeed #shorts #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #breakingnews #socialvisiontv
Social Vision TV
#shortvideo #shortfeed #shorts #socialvisiontv #dmk
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

மாவட்டங்கள்

தலித் மாணவரை  சுட்டுகொன்ற காவல்துறையை கண்டித்து காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம்.

March 2, 2024
போக்சோ இணையதள சேவை
குழந்தைகள் உலகம்தமிழ்நாடு

பெண்குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய போக்சோ இணையதள சேவை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடக்கிவைத்தார்.

June 18, 2024
ஆன்மிகம்

ரெட்டியூர் கிராமத்தில் ஸ்ரீ முனியப்பன் ஆலய கும்பாபிஷேகம் விழா

September 15, 2024
உலகம்

ஆக்கிரமிப்புக்கு ஆளான அப்பாவி குழந்தைகளின் சர்வதேச தினம், 

June 3, 2024
அரசு நல திட்டம்

தருமபுரிக்கு ஜூலை 11 முதல்வர் மு.க.ஸ்டாலின் வருவதைமுன்னிட்டு முன்னேற்பாடு பணிகளை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பார்வையிட்டார்.

July 10, 2024
புத்தகம் பேசினால்

‘நீரதிகாரம்’ நாவலுக்காக அ.வெண்ணிலா செலுத்தியிருக்கும் உழைப்பு பிரமிக்கவைக்கிறது : நடிகர் சூர்யா.

February 16, 2024

மேலும் படிங்க

Uncategorized

பொதுத் தேர்வெழுதும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் எனது நல் வாழ்த்துகள்.மநீம தலைவர் நடிகர் கமல்ஹாசன்

March 3, 2025
Uncategorized

அகரம் விதைத்திட்டம் 5287 மாணவர்களுக்கு கல்லூரியில் படிக்கும் வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுத்திருக்கிறது. நடிகர் சூர்யா பெருமிதம் 

July 28, 2024
Uncategorized

தமிழ்நாட்டில் தொடர்தோல்வி அடைத்த பிறகும் ஒன்றிய அரசு பாடம் கற்றுக் கொள்ளவில்லை. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தருமபுரியில் பேச்சு 

July 11, 2024
Uncategorized

கிராம பகுதிகளில்  மினி பேருந்து வழித்தடங்களை அதிகமாக அமைக்க நடவடிக்கை அமைச்சர் சிவசங்கர்

June 29, 2024

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?