மும்மொழி என்ற
மூன்றாம் ஓட்டை எதற்கு? -கவிஞர் வைரமுத்து
புத்தகத் திருவிழாவில் பங்கேற்று பேசிய கவிஞர் வைரமுத்து, மும்மொழி என்ற
மூன்றாம் ஓட்டை எதற்கு? என கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்
மு.பிரதாப் அவர்களின்
அழைப்பின் பேரில்
புத்தகக் காட்சியின்
நிறைவு விழாவுக்குச் சென்றிருந்தேன்பொதுமக்களும் மாணவர்களும்பின்னிக் கலந்த பெருங்கூட்டம்
“இருமொழிக் கொள்கையால்தான்
தமிழர்கள் தமிழ்நாடில் வளர்ந்திருக்கிறார்கள்;
இந்தியாவிலும், உலகமெங்கும்
பரவியிருக்கிறார்கள்
தாய்மொழி கற்றால்
அன்னை நாட்டில் வெற்றி;
ஆங்கிலம் கற்றால்
அகிலத்தில் வெற்றி
இரண்டு பூனைகள் வளர்ப்பவன்
பூனைகள் வருவதற்கு
கதவில் இரண்டு ஓட்டைகள் போட்டாலே போதுமானது;
அதில் எந்தப் பூனையும்
உள்ளே நுழைந்து வரும்
மும்மொழி என்ற
மூன்றாம் ஓட்டை எதற்கு?
வடநாட்டு மாணவர்கள்
ஒரு மொழியில்
உலகத்தை முடித்துக்கொள்ளத்
தென்னகம் மட்டும்
மும்மொழிச் சுமைதாங்கி
மூச்சுவாங்க வேண்டுமா?
தாய்மொழிப் பற்றோடு
தமிழ்நாட்டில் நிமிருங்கள்
அயல்மொழி கற்று
அயல்நாட்டில் பரவுங்கள்
இருமொழிக் கொள்கையே
போதும்
அகிலம் அதற்குள் அடங்கும்
மூன்றாம் மொழி கற்பது
தேவையின் அடிப்படையில்
இருக்கட்டும்;
திணிப்பின் அடிப்படையில்
வேண்டாம்” என்று பேசினேன்கையோடு வந்தவர்கள் எல்லாம்கைதட்டினார்கள்.என கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

