மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: மினி பேருந்து அனுமதிச்சீட்டு பெற  மார்ச்-15 வரை விண்ணப்பிக்கலாம்.
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > தமிழ்நாடு > மினி பேருந்து அனுமதிச்சீட்டு பெற  மார்ச்-15 வரை விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாடு

மினி பேருந்து அனுமதிச்சீட்டு பெற  மார்ச்-15 வரை விண்ணப்பிக்கலாம்.

Social Vision
Last updated: 2025/03/11 at 2:57 PM
Social Vision
Share
1 Min Read
SHARE
மினி பேருந்து அனுமதிச்சீட்டு பெற  மார்ச்-15 வரை விண்ணப்பிக்கலாம்.
தருமபுரி  மாவட்டத்தில்  மினிபேருந்து புதிய விரிவான திட்டம் 2024ன்-கீழ் புதிய வழித்தடங்களுக்கான மினி பேருந்து அனுமதிச்சீட்டு பெற  காலநீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளதால் வருகின்ற 15.03.2025 வரை விண்ணப்பிக்கலாம்.என தருமபுரி மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஷ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர்  ரெ.சதீஸ், தெரிவித்துள்ளதாவது:
மினி பேருந்திற்கான புதிய விரிவான திட்ட அரசாணை பொதுமக்களின் நலன் கருதி வெளியிடப்பட்டுள்ளது. அதிக குடும்பங்களை கொண்ட கிராமங்கள், குக்கிராமங்களின் குடியிருப்புகளில் உள்ள மக்களுக்கு போக்குவரத்து வசதியை உறுதி செய்யும் வகையில் பொருளாதார மற்றும் முறையான ஒருங்கிணைந்த சாலை போக்குவரத்து சேவையை வழங்குவதற்காக இத்திட்டம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த புதிய விரிவானதிட்டம் 01.05.2025  முதல் அமலுக்கு வரவிருக்கிறது.
இத்திட்டத்தின்படி,  அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தின் நீளம் அதிகபட்சம் 25 கி.மீ ஆகும். அதில் சேவை செய்யப்படாத பாதையின் நீளம் மொத்த வழித்தட நீளத்தில் குறைந்தபட்சம் 65 விழுக்காட்டிற்கு குறையாமல் இருக்க வேண்டும். வழித்தடத்தின் தொடக்கபுள்ளி மற்றும் முனையப்புள்ளி சேவை செய்யப்படாத வழித்தடத்தில் உள்ள ஏதேனும் ஒரு குடியிருப்பாகவோ கிராமமாகவோ இருக்க வேண்டும். அதில் ஒன்று பேருந்து நிறுத்தமாகவோ அல்லது பேருந்து நிலையமாகவோ   இருக்கலாம்.
தருமபுரி  மாவட்டத்தில்  இந்த  மினிபேருந்து புதிய விரிவான திட்டம் 2024ன்-கீழ் இதுவரை 38 புதிய வழித்தடங்களுக்கு விண்ணப்பிக்க தருமபுரி மாவட்ட அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. மேற்காணும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு பொதுமக்கள், மக்கள் பிரதிநிதிகள், தனியார் அமைப்புகள் மற்றும் பேருந்து உரிமையாளர்கள் ஆகியோரிடமிருந்து புதிய வழித்தடத்திற்கு தற்போது 15.03.2025 வரை காலநீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளதால் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
மேலும் மினிப்பேருந்திற்கான புதிய விரிவான திட்டம்-2024 நிபந்தனைகளுக்குட்பட்டு புதியதாக வழித்தடங்கள் கண்டறியப்பட்டால் உரிய வழித்தட வரைப்படங்களுடன் விண்ணப்பங்களை பொதுமக்கள், மக்கள் பிரதிநிதிகள், தனியார் அமைப்புகள் மற்றும் பேருந்து உரிமையாளர்கள்  ஆகியோர் செயலர், வட்டாரப் போக்குவரத்து அதிகாரி, தருமபுரி அவர்களிடம் உரிய கட்டணம் செலுத்தி 15.03.2025-க்குள் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
TAGGED: தருமபுரி அவர்களிடம் உரிய கட்டணம் செலுத்தி 15.03.2025-க்குள் விண்ணப்பிக்கலாம்., தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மினி பேருந்து அனுமதிச்சீட்டு பெற  மார்ச்-15 வரை விண்ணப்பிக்கலாம்., வட்டாரப் போக்குவரத்து அதிகாரி
Social Vision March 11, 2025 March 11, 2025
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralreels #socialvisiontv
#shorts #shotsviral #viralshorts #shortsfeed #share #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralshorts
#shorts #shortvideo #shortsviral #viral #viralreels
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viralshorts #pmk #pmknews #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #shortsviral #viral #viralvideos #dmdk #socialvisiontv
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

சினிமா

என்மீது ஒரு பழி உண்டு  -அது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. – கவிஞர் வைரமுத்து 

June 19, 2025
தமிழ்நாடு

ஆடிப்பெருக்கு விழா முன்னேற்பாடு குறித்து மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி ஒகேனக்கல்லில் ஆய்வு 

July 28, 2024
அரசு நல திட்டம்
அரசு நல திட்டம்

மக்களுடன்முதல்வர் திட்டத்தின் கீழ், திருச்சிராப்பள்ளி பயனாளிக்கு ஆணையினை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்

February 16, 2024
அரசியல்

விலைவாசி உயர்வால் மக்கள் விழி பிதுங்கி பறிதவிப்பது ஆட்சியாளர்களின் கண்களுக்கு தெரியவில்லையா?சிபிஎம் மாநில செயலாளர்  பெ.சண்முகம் 

May 25, 2026
கல்வி & வேலைவாய்ப்பு

ஜனநாயகத்தை கொலை செய்யக்கூடிய ஒரு முயற்சியாகத்தான், இந்த SIR:  கனிமொழி கருணாநிதி எம்.பி பேச்சு

November 7, 2025
மாவட்டங்கள்

தருமபுரி ஜமாபந்தி பொதுமக்களிடமிருந்து மனு.

June 25, 2024

மேலும் படிங்க

தமிழ்நாடு

முரசு புயல்: வடதமிழகத்தில் கனமழை, பலத்த காற்று!

November 1, 2026
தமிழ்நாடு

போக்சோ, போதைப்பொருள் வழக்குகளை விரைந்து விசாரிக்க 30 புதிய சிறப்பு நீதிமன்றங்கள்!

November 1, 2026
தமிழ்நாடு

தேனி சிறையில் கைதிகள் தப்பிய சம்பவம்: பொறுப்பு சிறைக் கண்காணிப்பாளர் பணியிடை நீக்கம்!

October 31, 2026
தமிழ்நாடு

தமிழகம் முழுவதும் ஆட்டோ கட்டணம் மறுநிர்ணயம்!

October 28, 2026

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?