கரும்பு டன் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்க வலியுறுத்தி கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்.
கரும்பு விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்புஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க ஆலை செயலாளர் வஞ்சி தலைமை வகித்தார்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் சோ. அருச்சுனன்,
மாவட்ட நிர்வாகிகள் பொன்னுசாமி, மனோகரன் பழனி தீர்த்தகிரி மாசிலாமணி, செல்வம், சக்திவேல் , ராஜசேகர், ராஜகுமாரன், சத்யராஜ், கிருஷ்ணமூர்த்தி, சுரேஷ், வெங்கடேசன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
கரும்பு உற்பத்தி செலவு இரண்டு மடங்கு அதிகரிப்பு, நோய் தாக்குதல் வறட்சி, புயல், வெல்லம், வன விலங்குகள் பாதிப்புகளால் மகசூல் இழப்பு, பிழிதிறன் குறைவு ஏற்படுகிறது. கரும்புக்கு கட்டுப்படியான விலை கிடைக்காததால் சாகுபடி பரப்பு குறைவு ஏற்பட்டுள்ளது.இந்த சூழ்நிலையில் கரும்பு விவசாயத்தையும் சர்க்கரை உற்பத்தி தொழிலையும் பாதுகாக்கும் பொருட்டு ஒன்றிய அரசும், மாநிலஅரசும், மாநில வருவாய் பங்கிட்டு முறை சட்டத்தை ரத்து செய்து ஆண்டுதோறும் மாநில அரசின் பரிந்துரை விலையினை அறிவிக்கவேண்டும். கரும்புக்கான ஊக்கத்தொகை டன் ஒன்றுக்கு ஆயிரமாக உயர்த்திவழங்கவேண்டும். கரும்பிலிருந்து கிடைக்கும்உப பொருட்கள் லாபத்தில் பாதியை விவசாயிகளுக்கு வழங்கவேண்டும். லாரி வாடகை ,கரும்பு வெட்டும் இயந்திரக்கூலியை ஆலை நிர்ணயிப்பதை போல், வெட்டு ஆட்களுடன் ஒப்பந்தம் ஏற்படுத்தி ஆலைநிர்வாகமே கரும்பை வெட்டி கொள்ள வேண்டும். கரும்பு விவசாயிகள் பொது பேரவை கூட்டம் நடத்திட வேண்டும். 18 கோடி லாபத்தில் விவசாயிகளுக்கு பங்கு ,ஈவுத்தொகை வழங்க வேண்டும் ஆலை மாசுகளை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பொது பிரிவு அலுவலர்களை முறையான மாறுதலுக்கு உட்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

