மாவட்டவாரியாக செய்தி சேகரிப்பு முகவர்கள் தேவை. தொடர்புக்கு: 9500440844

  • Contact Us: socialvisiontv@gmail.com
SUBSCRIBE
Social Vision TV
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Reading: கிருஷ்ணபுரம் முதல்வர் மருந்தகத்தில் மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஷ் திடீர் ஆய்வு 
Share
Font ResizerAa
Social Vision TVSocial Vision TV
Search
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • மாவட்டங்கள்
  • ஆன்மிகம்
  • குற்றம்
  • சினிமா
  • உலகம்
  • இந்தியா
  • ஆரோக்கியம்
  • காணொளி
  • பிற
    • விளையாட்டு
    • தொழில்
    • புகைப்படம்
    • அரசு நல திட்டம்
    • கல்வி & வேலைவாய்ப்பு
    • புத்தகம் பேசினால்
    • சாதனையாளர்கள்
    • தொல்லியல்
    • குழந்தைகள் உலகம்
    • சுற்றுலா
Follow US
Social Vision TV > ஆரோக்கியம் > கிருஷ்ணபுரம் முதல்வர் மருந்தகத்தில் மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஷ் திடீர் ஆய்வு 
ஆரோக்கியம்

கிருஷ்ணபுரம் முதல்வர் மருந்தகத்தில் மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஷ் திடீர் ஆய்வு 

Social Vision
Last updated: 2025/03/04 at 1:23 PM
Social Vision
Share
2 Min Read
SHARE
கிருஷ்ணபுரம் முதல்வர் மருந்தகத்தில் மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஷ் திடீர் ஆய்வு 
தருமபுரி மாவட்டம், கம்பைநல்லூர் பேரூராட்சியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1.48 கோடி மதிப்பீட்டில் குடிநீர் வழங்குதலை மேம்படுத்த 1 இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி உள்ளிட்ட குடிநீர் திட்டப்பணிகள் அமைக்கப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ்,  (04.03.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
முன்னதாக, தருமபுரி மாவட்டம், கம்பைநல்லூர் பேரூராட்சி அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.சதீஸ்,  ஆய்வு மேற்கொண்டு, அங்கு பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளை பார்வையிட்டு, பொதுமக்களின் தகுதியான கோரிக்கை மனுக்கள் மீது, காலதாமதத்தை தவிர்த்து, உரிய நேரத்தில் நடவடிக்கை மேற்கொண்டு கோரிக்கைகள் நிறைவேற்றிட வேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு 
கம்பைநல்லூர் பேரூராட்சியில் உள்ள நகர்புற ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் ரூ.60.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் கூடுதல் ஆரம்ப சுகாதார நிலைய கட்டடத்தினை ஆய்வு மேற்கொண்டார். மேலும், கம்பைநல்லூர் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் பராமரிக்கப்பட்டு வரும் வெளிப்புற நோயாளிகள் பதிவேடு ஆய்வு செய்து, கர்ப்பிணி தாய்மார்களுக்கு வழங்கப்படும் மருத்துவ சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார். குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் முறையாக போடப்படுவதை உறுதி செய்ய வேண்டுமெனவும் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
முதல்வர் மருந்தகத்தில் திடீர் ஆய்வு 
இதனை தொடர்ந்து, தருமபுரி மாவட்டம், கிருஷ்ணாபுரம் முதல்வர் மருந்தகத்தில் மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ்,  திடீர் ஆய்வு மேற்கொண்டு,  மருந்துகளின் விவரங்கள் குறித்தும், மருந்துகள் மற்றும் மாத்திரைகளின் தேவையான அளவு இருப்பு உள்ளதா என்பது குறித்தும் கேட்டறிந்தார்.
இதனைதொடர்ந்து, தருமபுரி மாவட்டம், கடத்தூர் ஊராட்சியில் ரூ.22.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நூலக கட்ட்டத்தினையும், கடத்தூர் ஊராட்சி, மணியம்பாடி கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் கால்வாய் அமைக்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, இப்பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள், விரைந்து முடித்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
தருமபுரி மாவட்டம், வடகரை பாப்பாரப்பட்டியில் ரூ.19.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு, பயன்பாட்டில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு, அப்பகுதி பொதுமக்களிடம் குடிநீர் விநியோகம் முறையாக வழங்கப்படுகிறதா என்பது குறித்து கேட்டறிந்தார்.
இந்த ஆய்வுகளின்போது, உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) கணேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெகதீசன், திருமதி.கலைவாணி உள்ளிட்ட தொடர்புடைய அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
Social Vision March 4, 2025 March 4, 2025
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Share
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

New Releases

SOCIAL VISION TV

SOCIAL VISION TV
அகில இந்திய வேலைநிறுத்த ஆயித்தமாநாடு #socialvisiontv
#shorts #shortvideo #shortfeed #socialvisiontv
#shortvideo #shortfeed #shorts #socialvisiontv
#shorts #shortvideo #shortsfeed #breakingnews #socialvisiontv
Social Vision TV
#shortvideo #shortfeed #shorts #socialvisiontv #dmk
Load More... Subscribe
- Advertisement -
Ad image

Trending Stories

அரசு நல திட்டம்

டாக்டர் அம்பேத்கர் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு  1,041 பயனாளிகளுக்கு 7.94 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் 

December 6, 2024
மாவட்டங்கள்

தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்க தருமபுரி மாவட்ட செயற்குழு கூட்டம்

September 1, 2025
வணிகவளாகம் கட்டும்பணி
அரசு நல திட்டம்

இந்து சமய அறநிலையத்துறை அலுவலகம், வணிக வளாகம் கட்டும்பணி காணொலி வாயிலாக தொடக்கிவைத்த முதல்வர்

March 8, 2024
குற்றம்தமிழ்நாடு

சிறுமி பாலியல் பலாத்காரம் கார் டிரைவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை

June 25, 2024
அரசியல்

AICCTU மாநிலபொதுக்குழு கூட்டம் 

July 13, 2024
அரசு நல திட்டம்

கள்ளிபுரம் மக்களுக்கு மனைப்பட்டா கேட்டு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மனு.

March 15, 2024

மேலும் படிங்க

ஆரோக்கியம்

நீரிழிவு கொண்டோர் தங்களைச் ’சக்கர’வர்த்திகள் என்று சொல்லிக்கொள்ளலாம் கவிதா வைரமுத்து 

November 14, 2025
ஆரோக்கியம்

தருமபுரி டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு, பேரணியினை மாவட்ட ஆட்சியர்  ரெ.சதீஸ் துவக்கிவைத்தார்.

October 23, 2025
ஆரோக்கியம்

பேக்கரி மற்றும் இனிப்பு, காரம் தயாரிப்பு நிறுவனங்களில் உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு.

October 19, 2025
ஆரோக்கியம்

பாலக்கோட்டில்  “நலம் காக்கும் ஸ்டாலின்” என்ற முழு உடல் பரிசோதனை மருத்துவ முகாம் ஆட்சியர் ரெ. சதீஷ் பார்வையிட்டார். 

August 23, 2025

Follow US on Social Media

Facebook Youtube

© Social Vision TV. All Rights Reserved.

Social Vision TV
Welcome Back!

Sign in to your account

Lost your password?