ராமலான்நோன்பை முன்னிட்டு 2500 நபர்களுக்கு பொருட்கள் அடங்கிய தொகுப்பை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு, மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ரமலான் நோன்பினை திறந்து வைத்து, 2500-க்கும் அதிகமான இஸ்லாமிய பெருமக்களுக்கு நோன்பிற்குத் தேவையான பொருட்கள் அடங்கிய தொகுப்பினை, இராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் இன்று வழங்கினோம்.
“சிறுபான்மை மக்கள் மனதில் பெரும்பான்மை இடத்தைப் பிடித்துள்ள நம் திராவிடமாடல் அரசு, என்றும் அவர்களுக்கு பாதுகாப்பு அரணாக இருக்கும்” என இந்நிகழ்வில் உரையாற்றினோம்.நலத்திட்டங்களை பெற்ற பயனாளிகளுக்கு புனித ரமலான் வாழ்த்துகளை தெரிவித்து மகிழ்ந்தோம்.என தனது எக்ஸ் பக்கத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

