தருமபுரி பாசனத்திற்கு தொப்பையாறு அணை திறக்க அரசு ஆணை
தருமபுரி மாவட்டம், தொப்பையாறு அணையிலிருந்து, 5330 ஏக்கர் ஆயக்கட்டு பகுதிகளுக்கு 03.03.2025 முதல் 11.05.2025 வரை மொத்தம் 70 நாட்களுக்கு 266.00 மில்லியன் கனஅடி தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது. இதன் மூலம் 5330 ஏக்கர் பாசனப்பரப்புகள் பாசனவசதி பெறும். என அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் (நீர்வளத்துறை) செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

