நூறுநாள் வேலை திட்டத்திற்கு ஒன்றிய அரசு நிதி ஒதுக்க கோரி தருமபுரியில் தர்ணா போராட்டம்
நூறுநாள் வேலைதிட்டத்திற்க்குஒன்றிய அரசு நிதி ஒதுக்க கோரி,தருமபுரி மாவட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்ட தொழிலாளர் சங்கம் சார்பில் தருமபுரி மாவட்ட ஆட்சியர அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடைபெற்றது.
கடந்த மூன்று மாதமாக பணிசெய்த கிராமப்புற தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய தின சம்பளம் ரூ2118 கோடியை ஒன்றிய அரசு உடனே வழங்க வேண்டும் . ஒன்றிய நிதி நிலை அறிக்கையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்டத்தின் 4.50 லட்சம் கோடி நிதி ஒதுக்க வேண்டும். தமிழ்நாடு கல்வித்துறைக்கு ஒன்றிய அரசு வழங்க வேண்டிய ரூ 2152 கோடி நிதியை உடனே விடுவிக்க வேண்டும்.
பத்து கிராம ஊராட்சிகளை நகராட்சி பேரூராட்சியுடன் இணைக்கும் முடிவை ரத்து செய்யவேண்டும். 100 நாள் பணி முடித்த பணிதள பொறுப்பாளர்களை மாற்ற வேண்டும்.உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

தர்ணா போராட்டத்திற்கு சங்க ஒருங்கிணைப்பாளர் ஜெ.பிரதாபன் தலைமைவகித்தார். இதில் சங்கஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர்கள் ஜி.மாதையன், அலமேலு,எல்.சி.கிருஷ்ணன்,வெ.பை.மாதையன்,ஜி.ராஜகோபால்,ஜி.பச்சாகவுண்டர்,கே.லட்சுமணன்,ராஜமாணிக்கம்,கோவிந்தன்,வெ.செல்வம்,மற்றும்ஏராளமானோர் கலந்துக் கொண்டனர். இறுதியில் கோரிக்கை மனுவை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சாந்தியிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

