அரூர் பட்டாசு விபத்து இறந்தவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவிக்க பிப்-26 தொல். திருமாவளவன் எம்பி வருகை
அரூர் கம்பைநல்லூர் பகுதியில் பட்டாசு விபத்தில் பலியான குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவிக்க விசிக தலைவர் திருமாவளவன் வருகைதர உள்ளார்.
இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கிழக்கு மாவட்ட செயலாளர் சி. கே. சாக்கன்சர்மா விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

தருமபுரி மாவட்டம் த.அம்மாபேட்டையை சேர்ந்த ஏழு பேர் கடந்த ஓராண்டுக்கு முன்பு ஒசூர் அருகே நடந்த பட்டாசு விபத்தில் பலியாகினர் இதேபோல் நேற்று பிற்பகல் கம்பைநல்லூர் அருகே முருக்கம்பட்டியில் நடந்த வெடிவிபத்தில் அம்பேத்கர் நகரை சேர்ந்த மூன்று பெண்கள் பலியாகினர் இந்நிலையில் அக்குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவிக்க விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் நாளை மாலை 7 மணிக்கு அரூர் அருகே உள்ள த.அம்மாபேட்டை கிராமத்திற்கு சென்று அங்குள்ள மக்களுக்கு ஆறுதல் தெரிவிக்கிறார் பின்னர்
8 மணி அளவில் கம்பைநல்லூர் அம்பேத்கர் நகரை சேர்ந்த மூன்று பேர் பலியான குடும்பங்களுக்கும் நேரில் சென்று ஆறுதல் தெரிவிக்கிறார் எனவே மாநில மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொள்ள வேண்டும் என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

